»   »  நானும் நடிக்கிறேன், நீயும் நடிக்கிறே... ராதாரவி "வார்னிங்"

நானும் நடிக்கிறேன், நீயும் நடிக்கிறே... ராதாரவி "வார்னிங்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் வந்த நடிகர் சங்கத் துணைத் தலைவர் ராதாரவி அங்கு நாடக நடிகர்களிடம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நடிகர் சங்கத் தேர்தலில் தங்களை எதிர்த்து பிரசாரம் செய்து வரும் நடிகர் விஷாலுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.

நடிகர்கள் சங்க தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. நடிகர்கள் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நடிகர் நாசர் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், இன்று கரூர் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சரத்குமார் அணி சார்பில் போட்டியிடும் நடிகர் ராதாரவி நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து அவர்களிடம் ஆதரவு கேட்டு அவர் பேசினார்.

காப்பாற்றத்தான் நாங்கள்

காப்பாற்றத்தான் நாங்கள்

அப்போது அவர் கூறுகையில், செத்துக்கொண்டிருக்கிறது சினிமா. அதை காப்பாற்றத்தான் தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளது.

நாடக நடிகர்கள் முக்கியம்

நாடக நடிகர்கள் முக்கியம்

நடிகர்கள் சங்கம் இருக்கும் வரை அங்கு நாடக நடிகர்கள் முக்கியம். நடிகர் விஷால் அணியினர் தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு சினிமா நடிகர்கள் சங்கம் என்று ஒன்றை தொடங்க உள்ளார்கள்.

நாங்கள் என்ன கெளரவர்களா?

நாங்கள் என்ன கெளரவர்களா?

நடிகர்கள் சங்க தேர்தல் நடப்பதற்கு முன்னதாக அவர்களை பாண்டவர்கள் என்கிறார்கள். அப்படியானால் எங்களை கௌரவர்கள் ஆக்குகிறார்கள். போருக்கு தயாராகிறார்கள். நடிகர்கள் சங்க தேர்தலை போராக மாற்றிவிடாதீர்கள்.

அத்தனையும் சரத் அணிக்கே

அத்தனையும் சரத் அணிக்கே

கரூரில் உள்ள 37 ஓட்டுகளும் சரத்குமார் அணிக்கே ஓட்டு விழவேண்டும். அதுவும் 29 பேருக்கும் விழவேண்டும்.

நானும் நடிக்கிறேன், நீயும் நடிக்கிறே

நானும் நடிக்கிறேன், நீயும் நடிக்கிறே

நான் வில்லனாக நடிக்கிறேன், நீயும் நடிக்கிறாய். ஒன்றாக இருக்க வேண்டும். பணம் கொடு ஓட்டு போடுகிறேன் என்று சொல்லாதே. 500, 1000 வைத்துக்கொண்டு எத்தனை நாள் ஓட்ட முடியும் என்றார் அவர் சூடாக.

English summary
Actor Radharavi has warned his opponents in Nadigar Sangam elections during his campaign in Karur.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil