»   »  தீபா புருசன், டிரைவரெல்லாம் வரும்போது ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? - ராதாரவி

தீபா புருசன், டிரைவரெல்லாம் வரும்போது ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? - ராதாரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் யார் யாரோ அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள். தீபா புருசன் மாதவனெல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினி வரக் கூடாதா? என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

நாமக்கல்லில் ராதாரவி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் கடவுள் முடிவு எடுப்பார் என்கிறார். எனவே அவர் எந்த முடிவு எடுத்தாலும் வரவேற்கத்தக்க முடிவு தான். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். தமிழக மக்களிடம் அவர் அதிகமான புகழ், பணம் சம்பாதித்து உள்ளார். எனவே இந்த மக்களுக்கு செலவு பண்ண தயாராக இருக்கிறார் என நினைக்கிறேன்.

Radharavi welcomes Rajini to politics

இதனை அவர் அரசியலுக்கு வரும்போதுதான் பார்க்க வேண்டும். அவர் யார், யாரை நல்லவர் என நினைக்கிறாரோ அவர்களை வைத்து கொள்ளலாம். தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை.

பொதுமக்கள் கருத்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என உள்ளது," என்றார்.

English summary
Actor Radha Ravi has welcomed actor Rajinikanth to politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil