»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் மூத்த நடிகர்களான ரஜினியும், கமலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது, சக நடிக, நடிகயரை முனுமுனுக்க வைத்துள்ளது. இந்தக்கூட்டத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபமும், அருங்காட்சியகமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

சங்கத்திற்கு சொந்தமான சுவாமி சங்கரதாஸ் கலையரங்கில் நடந்த இக் கூட்டத்தில் ஏராளமான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.இருப்பினும் முன்னணி நடிகர், நடிகையரை அதிகம் பார்க்க முடியவில்லை.

இது குறித்து பல நடிகர்களும் வருத்தப்பட்டனர். கோவை சரளா பேசுகையில், முன்னணி நடிகர், நடிகையரை மிரட்டியாவது தலைவர்விஜயகாந்த் இனிமேல் கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும் என்றார்.

விஜயகாந்த்தும் தனது பேச்சின்போது, மூத்த நடிகர்கள் இப்படி கூட்டங்களைப் புறக்கணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களும்இனிமேல் கண்டிப்பாக கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்றுகடுமையாகவே கூறினார்.

நடிகர் சங்கத்தின் வங்கிக் கடன் மொத்தம் ரூ. 1.4 கோடியாக இருந்தாகவும், இப்போது அதில் பெருமளவு கடன் தொகை திருப்பிச்செலுத்தப்பட்டதாகவும், இன்னும் ரூ. 48 லட்சம் மட்டுமே பாக்கி உள்ளதாகவும் விஜயகாந்த் கூறியபோது கூடியிருந்தோர் மகிழ்ச்சிஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்.

தொடர்ந்து விஜயகாந்த் பேசுகையில், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கலை நிகழ்ச்சி நடத்தவுள்ளோம். ஜூலை 27ல் கோலாலம்பூரிலும்,28ம் தேதி சிங்கப்பூரிலும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதன் மூலம் வசூலாகும் பணத்தை வைத்து கடன் அடைக்கப்படும்.

இதுதவிர அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

நடிகர் சிவாஜி கணேசன் மறைந்து ஒரு வருடம் ஆகப் போவதையொட்டி வருகிற ஜூலை மாதம் சங்கத்தின் சார்பில் இரங்கல் கூட்டம்நடைபெறவுள்ளதாகவும், அதில் எல்லா நடிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து கூறுகையில், நடிகர் திலகத்திற்கு மணி மண்டபம், அருங்காட்சியகம் அமைக்க சங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால் சங்கமேகடனில் உள்ளதால் இவற்றை முழுமையாக சங்கம் மட்டுமே செய்ய முடியாது. எனவே முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரடியாக சென்றுஉதவி கேட்பது என்றும்முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

சமீபத்தில் சைதை தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் ராதாரவிக்கு பாராட்டும் நடத்தப்பட்டது. நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன்உள்ளிட்டோர் திமுகவினர், அதிமுகவைச் சேர்ந்த ராதாரவிக்கு மாலை அணிவித்து பாராட்டினர்.

அவருக்கு வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டது. நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவராக ராதாரவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் ஹாசன், ரஜினிகாந்த போன்ற மூத்த நடிகர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருவது குறித்து கூட்டத்திற்கு வந்திருந்தநடிக, நடிகையர் முனுமுனுத்ததையும் கேட்க முடிந்தது.

அதே போல இளைய தலைமுறை நடிகர்களான அஜீத், விஜய், விக்ரம், பிரஷாந்த் ஆகியோர் குறித்தும் சிலர் முனுமுனுத்தனர்.

மலேசிய கலை நிகழ்ச்சி அஜீத்தை விஜய்காந்த் கூப்பிட்டாராம். ஆனால், வர முடியாது என்று கூறிவிட்டாராம் அஜீத். இது குறித்துவிஜய்காந்த் கேள்வி கேட்கவே, நீங்கள் நடிகர் சங்கக் கடனை அடைக்க எவ்வளவு தந்தீர்கள் என்று தெரியாது. ஆனால், நான் ஏற்கனவே 2லட்சம் தந்துவிட்டேனே.. அப்புறம் என்ன.. என்னை விட்டுவிடுங்கள் என்று கூறிவிட்டு காரில் ஏறி பறந்துவிட்டாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil