»   »  முதல்ல உங்களுக்கு மெச்சூரிட்டி தேவை.. நடிகர் சங்கத்தை சாடும் ராதிகா

முதல்ல உங்களுக்கு மெச்சூரிட்டி தேவை.. நடிகர் சங்கத்தை சாடும் ராதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தங்களை அழைக்கவில்லை என நடிகை ராதிகா தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில், நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடத்தியது.

Radhika Discontent about Star Cricket

சுதீப், பாலகிருஷ்ணா, மம்முட்டி, நிவின் பாலி, சிவராஜ்குமார், வெங்கடேஷ், நாகார்ஜூனா என அண்டை மாநில நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

அதே நேரம் அஜீத், விஜய், சிம்பு, சரத்குமார், ராதாரவி, வடிவேலு, ராதிகா போன்ற முன்னணி நடிக,நடிகையர் இப்போட்டியில் பங்கு பெறவில்லை.

இதுகுறித்து நடிகை ராதிகா "இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் அனைவரையும் அழைத்திருந்தால் உங்களின் முதிர்ச்சி மற்றும் அனைவரிடமும் இணக்கமாக இருக்கும் தன்மை வெளிப்பட்டிருக்கும்.

இதைவிட பெரிய நிகழ்ச்சிகளை நாட்டிற்காகவும், நடிகர் சங்கத்திற்காகவும் அவர்கள் செய்திருக்கின்றனர். இது உங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நீங்கள் என்னை அழைக்கவும் மறந்து விட்டீர்கள். சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

English summary
Actress Radhika Discontent about Nadigar Sangam Star Cricket.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil