»   »  24 ஆண்டுகள் கழித்து காமரேடாக கேரளா செல்லும் 'சித்தி' ராதிகா

24 ஆண்டுகள் கழித்து காமரேடாக கேரளா செல்லும் 'சித்தி' ராதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ராதிகா சரத்குமார் 24 ஆண்டுகள் கழித்து மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அருண் கோபி இயக்கத்தில் திலீப் நடித்து வரும் மலையாள படம் ராமலீலா. இந்த படத்தில் திலீப் அரசியல்வாதியாக நடிக்கிறார். அவருக்கு அம்மாவாகவும், அரசியலில் ஈடுபடுபவராகவும் நடிக்கிறார் ராதிகா சரத்குமார்.

Radhika goes to Mollywood after 24 years

ராதிகா கதாபாத்திரத்தின் பெயர் சகாவு ராகினி. சகாவு என்றால் காம்ரேட் என்று அர்த்தமாம். ராதிகா 24 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் நடிக்கிறார்.

திலீப் எம்.எல்.ஏ. வாக நடிக்கும் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு பாலக்காடு மற்றும் எர்ணாகுளத்தில் நடந்தது. தாய் மகன் இடையே இருக்கும் பாசம் பற்றி தான் படமாம்.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவா, மகாராஷ்டிரா மற்றும் மாலத்தீவுகளில் நடைபெற உள்ளது. முகேஷ், சலீம் குமார், சித்திக், சுரேஷ் கிருஷ்ணா, ரெஞ்சி பனிக்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

English summary
Radhika Sarathkumar goes to Mollywood after 24 long years. She is acting in Dileep's upcoming movie Ramaleela.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil