»   »  தர்மதுரையில் 'சீனீயர்' ராதிகாவை அவமதித்துவிட்டார்கள்... ட்விட்டரில் சரத்குமார் கொந்தளிப்பு

தர்மதுரையில் 'சீனீயர்' ராதிகாவை அவமதித்துவிட்டார்கள்... ட்விட்டரில் சரத்குமார் கொந்தளிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தர்மதுரை படத்தில் ராதிகாவை அவமதித்துவிட்டதாக நடிகர் சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ச்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்த தர்மதுரை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


படம் ரிலீஸான மூன்று நாட்களில் ரூ.6.75 கோடி வசூலித்துள்ளது.


மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தர்மதுரை ஹிட்டானதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சரத்குமார் தர்மதுரையை பாராட்டியும் உள்ளார், குறையும் கூறியுள்ளார்.


அவமதிப்பு

தர்மதுரை படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். டைட்டில் கார்டில் சீனியர் நடிகையான ராதிகாவை அவமதித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. சீனியர்களுக்கு மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன் என்று சரத்குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


தர்மதுரை

தர்மதுரை அருமையான படம். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும். திரைக்கதை மற்றும் முற்போக்கு சிந்தனை எமோஷனல் படம், ராதிகா விஜய், பாஸ்கர், ஐஸ்வர்யா மற்றும் என சரத் மேலும் ட்வீட்டியுள்ளார்.


கங்கிராட்ஸ்

ஒட்டுமொத்த படக்குழு, இசை மற்றும் இயக்குனர் அருமை, வாவ். இந்த கதையை தேர்வு செய்த தயாரிப்பாளர் சுரேஷுக்கு கங்கிராட்ஸ் என சரத்குமார் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.
English summary
Sarath Kumar tweeted that, 'Started watching dharmadurai,disappointing to see a senior artist Radika being insulted in the tittle card hope seniors are respected.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil