Just In
- just now
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 9 min ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
- 1 hr ago
நல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!
- 1 hr ago
ரம்யா பாண்டியனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்.. கடுப்பான அனிதா.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
Don't Miss!
- News
ஒரு மனுச பொய் சொல்லலாம்.. ஆனால் ஏக்கர் கணக்குல பொய் சொல்லக்கூடாது.. டிரம்ப் பேசிய 30573 பொய்கள்!
- Sports
கோவாவை சமாளித்த கேரளா பிளாஸ்டர்ஸ்.. டிராவில் முடிந்த போட்டி!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் கொடூரமான பாலியல் ஆசைகள்... இப்படிலாம் கூடவா ஆசைப்படுவாங்க...!
- Automobiles
இந்தியாவிலேயே இந்த அம்சத்தை பெறும் முதல் ஹூண்டாய் க்ரெட்டா இதுதான்.. அப்படி என்ன அம்சம் அது? வாங்க பார்ப்போம்!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவகார்த்திக்கேயன், நயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார்.. ராஜேஷ் மகிழ்ச்சி!

சென்னை: ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிய வந்துள்ளது.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்த ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை எஸ்கே13 எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஹிப் ஹாப் ஆதி இப்படத்துக்கு இசை அமைக்கிறார். ஸ்டுடியோகிரீன் ஃபிலிம்ஸ் சார்பில் கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமாரும் நடிப்பதாக இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி
இது குறித்து அவர் கூறுகையில், "எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும், நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது.

சிவகார்த்திக்கேயன்:
கேஈ ஞானவேல்ராஜா போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதும் இதற்கு முக்கிய காரணம். நிச்சயமாக, சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரை சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்வோடும், புத்துணர்ச்சியோடும் வைத்திருப்பார்.

ராதிகா:
நயன்தாரா இத்தனை ஆண்டுகள் கழித்தும் உச்சத்தில் இருப்பதை வைத்தே அவரின் ஆற்றலை அறிந்து கொள்ளலாம். இப்போது, ராதிகா மேடம் இந்த படத்தில் சேர்ந்தது, படத்துக்குள் இன்னும் பாஸிட்டிவாக அமைந்திருக்கிறது. ராதிகா மேடம் அவர்களுக்கு என்றே வடிவமைத்த கதாபாத்திரம் இது என சொல்லலாம். அவரை தவிர இத்தகைய கதாபாத்திரங்களுக்கு யாரும் உயிர் தந்து விட முடியாது.

நம்பிக்கை:
சிறந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், இத்தகைய பெரிய இயல்பான மனிதர்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இது எங்களது படத்தை மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்க உதவுகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.