மோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து ரூ.1.5 கோடி பெற்றாரா? பிரபல நடிகை விளக்கம்!

By

பெங்களூரு: மோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து பணம் பெற்றதாக வந்த தகவல் பற்றி நடிகை குட்டி ராதிகா விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூருவை சேர்ந்தவர் யுவராஜ் சாமி. ஜோதிடரான இவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க தலைவர்களின் பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.

இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாயின.

மீசை மாதவன்

மீசை மாதவன்

நடிகை குட்டி ராதிகாவுக்கு ரூ.1' கோடி கொடுத்ததாகக் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னட நடிகையான குட்டி ராதிகா, ஜனநாதன் இயக்கிய இயற்கை மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். தொடர்ந்து வர்ணஜாலம், மீசை மாதவன், சொல்லட்டுமா உட்பட சில படங்களில் நடித்தார்.

முன்னாள் முதல்வர்

முன்னாள் முதல்வர்

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஷமிகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் யுவராஜ் சாமி கொடுத்ததாகக் கூறிய பணம் பற்றி நடிகை குட்டி ராதிகா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஜோதிடம் பலித்துள்ளது

ஜோதிடம் பலித்துள்ளது

யுவராஜ் சாமி, என் குடும்ப ஜோதிடர். என் தந்தை நண்பரான அவர் எங்கள் குடும்பத்துடன் 17 வருடங்களாக நட்பில் இருந்து வருகிறார். எனது எதிர்காலம் குறித்து அவர் கூறிய ஜோதிடம் இதுவரை பலித்துள்ளது. இதனால் அவர் மீது எனக்கு மட்டுமின்றி எங்கள் குடும்பத்தினருக்கு நல்ல மரியாதை உள்ளது.

வரலாற்று படம்

வரலாற்று படம்

அவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்திருக்கிறார். அதன் மூலம் வரலாற்று படத்தை தயாரிக்க விரும்பினார். 'நாட்டிய ராணி சாந்தலா' என்ற படத்தை தயாரிக்க நாங்கள் முடிவு செய்தோம். இதில் நடிக்க எனக்கு முதல்கட்டமாக ரூ.15 லட்சம் அனுப்பினார். பிறகு தனது உறவினர் மூலம் ரூ.60 லட்சம் அனுப்பினார்.

சினிமா விஷயம்

சினிமா விஷயம்

அவ்வளவு தான். 1.25 கோடி பெற்றதாகச் சொல்வது தவறு. சினிமா விஷயம் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அவருடன் எனக்கு தொடர்பு இல்லை. அவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதுவரை நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. நாங்கள் தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். இதில் நான் எந்த தவறும் செய்யவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X