twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆன்ட்டி முதல்ல நீங்க மாறுங்க.. பிரா ஸ்ட்ராப் வெளியே தெரிஞ்சா தப்பில்லை.. வைரலாகும் வீடியோ!

    |

    மும்பை: பெண்கள் அணியும் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரிந்தாலே, அவர்களை அந்த மாதிரியான பெண்கள் என நினைக்கும் மன நிலை மாற வேண்டும் என்பதற்காக எம். டிவி ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளது.

    இர்ஃபான் கானின் ஆங்க்ரேஸி மீடியம் படத்தில் நடித்து வரும் நடிகை ராதிகா மதன், இந்த விழிப்புணர்வு வீடியோவில் நடித்து, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

    ஆண்களுக்கு அட்வைஸ் சொல்வதற்கு, பதிலாக, ஆன்ட்டிக்களுக்கு தான் இந்த விஷயத்தில் அட்வைஸ் தேவை என்பதை அழகாக வீடியோ மூலம் விளக்கி உள்ளனர்.

    பெண்களின் எதிரி

    பெண்களுக்கான ரியல் எதிரி என்றால் அது, இன்னொரு பெண்ணாகத்தான் இருக்க முடியும். பெண்களை, இப்படி இரு, அப்படி இரு என கட்டுப்படுத்துவது மற்றும் கட்டாயப்படுத்து பெரும்பாலும், வயது முதிர்ந்த பெண்களாகத்தான் இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த விழிப்புணர்வு வீடியோ ஆன்ட்டிக்களையே குறிவைத்து நகர்கிறது.

    தப்பா நினைக்கக் கூடாது

    தப்பா நினைக்கக் கூடாது

    சேலை, சுடிதார், டி-சர்ட் என்று எதை அணிந்தாலும், ஆடை சற்று விலகி, அவர்கள் அணியும் பிரா ஸ்ட்ராப் தெரிவது இயல்பாக நடக்கும் ஒரு விஷயம் தான். ஆனால், அதனை பெரிது படுத்துக் கூடாது, என்றும், பிரா ஸ்ட்ராப் விலகி இருந்தாலே, அந்த பெண்கள் தப்பான பெண்கள் என்று நினைக்கும் மனநிலையை இந்த சமூகம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை இந்த வீடியோ வலியுறுத்துகிறது.

    ராதிகா மதன்

    ராதிகா மதன்

    MTv சார்பாக baarbradekho என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தயாரிக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு வீடியோவில், பாலிவுட் நடிகை ராதிகா மதன் நடித்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வந்த இவர், இர்பான் கான் நடிப்பில் உருவாகி உள்ள Angrezi Medium படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    சமூகத்தில் பெண்களுக்கு

    சமூகத்தில் பெண்களுக்கு

    பெண்களை கண்களால் பலாத்காரம் செய்வது போல பார்ப்பது, கூட்ட நெரிசல், பேருந்து மற்றும் ஆட்டோக்களில் வேண்டுமென்றே உரசுவது, தொடுவது போன்ற பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் சமூகத்தில் தினந்தோறும் நடைபெற்று வருவதாகவும், உள்ளாடை வெளியே தெரிவதால், மட்டுமே இது நிகழ்வது இல்லை என்றும் ராதிகா மதன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

    உங்கள் இஷ்டம் தான்

    உங்கள் இஷ்டம் தான்

    பெண்கள் தாங்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பதை தாங்களே தீர்மானிக்கும் முழு சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கிறது. அடுத்தவங்க தப்பா பேசுவாங்க, பக்கத்து வீட்டு ஆன்ட்டி திட்டுவாங்க, சொந்தக்காரங்க கேட்பாங்க என்று தயங்க வேண்டாம். உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதனை நீங்களே முடிவெடுங்கள் எனக் கூறி இளம் பெண்களின் பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.

    English summary
    Radhika Madan joins an initiative against bra strap shaming. The actor is a part of the video that sarcastically points out how young women are shamed for their peeking bra straps.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X