»   »  நடிகர் சங்கம் ஒன்றும் அவர்கள் வீட்டு சொத்து அல்ல!- ராதிகா

நடிகர் சங்கம் ஒன்றும் அவர்கள் வீட்டு சொத்து அல்ல!- ராதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கம் ஒன்றும் யாருடைய சொந்த சொத்தும் அல்ல.. அது எங்கள் அனைவருக்கும் பொதுவானது. எனவே சிம்பு வெளியேறக் கூடாது என நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

நடிகர் சங்க விவகாரம் தேர்தல் முடிந்த பிறகும் சமாதானத்துக்கு வந்த மாதிரி தெரியவில்லை. இந்தத் தேர்தலில் தோற்ற ராதிகா சரத்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

Radhika's advice to Simbu

சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த ராதிகா ஆதரவாளர் சிம்பு, தன் பிரச்சினைக்கு உதவாத நடிகர் சங்கத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசரைக் கேட்டபோது, அப்படி ஒரு தகவலும் தனக்கு வரவில்லை என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் நடிகை ராதிகா ட்விட்டரில் சிம்புவுக்கு ஒரு செய்தி கூறியுள்ளார். அதில் "நடிகர் சங்கம் ஒன்றும் அவர்கள் வீட்டுச் சொத்து அல்ல... இது நமது சங்கம். அவர்கள் (விஷால் அணி) உனக்கு ஆதரவு தர மாட்டார்கள். ஆனால் நீதான் ஜெயிப்ப. நடிகர் சங்கத்தை விட்டு விலகும் முடிவை மறுபரிசீலனை செய் சிம்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Radhika advised actor Simbu from quitting Nadigar Sangam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil