கையில் சிகரெட்டுடன் ராதிகா...வில்லி கெட்அப் போஸ்டரால் கிளம்பிய சர்ச்சை
சென்னை : விஜய் ஆன்டனி நடித்துள்ள த்ரில்லர் படம் கொலை. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடித்த கேரக்டர்களின் போஸ்டர்கள் கடந்த ஒரு வாரமாக வெளியிடப்பட்டு வருகின்றன.
Recommended Video
இந்த படத்தின் ஒவ்வொரு போஸ்டர்களும் ரசிகர்களின் ஆர்வத்தை துண்டும் விதமாக அமைந்திருந்தது. அந்த வரிசையில் தற்போது ராதிகா சரத்குமாரின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
கொலை படத்தின் புதிய போஸ்டரில் ராதிகா சரத்குமார் கையில் சிகரெட்டுடன் அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த படத்தில் ராதிகா, கேங்ஸ்டர் ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

கொலை படத்தில் ரேகா என்ற கேரக்டரில் தான் ராதிகா நடித்திருக்கிறாராம். கொலை படத்தில் சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளில் ராதிகா தான் முக்கியமானவராம். இதனால் முக்கிய வில்லியே இவர் தான் என சொல்லப்படுகிறது.
கொலை படத்தில் விஜய் ஆன்டனி, ரித்விகா சிங், ராதிகா, முரளி சர்மா, மீனாட்சி செளத்ரி, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலாஜி குமார் இயக்கி உள்ள இந்த படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.
யானை, வெந்து தணிந்தது காடு என வரிசையாக ஹீரோக்களுக்கு அம்மா ரோல்களில் நடித்து வரும் ராதிகா திடீரென கொலை படத்தில் வில்லி அவதாரம் எடுத்திருப்பதுடன், அல்ட்ரா மாடர்ன் டிரெசில் கையில் சிகரெட்டுடன், வில்லி லுக்குடன் செம கேத்தாக ராதிகா அமர்ந்திருக்கும் இந்த போஸ்டர் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
டாப் ஹீரோக்கள் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு எதிர்ப்பு வந்து, சர்ச்சை ஆக்கப்படுவதால் ரஜினி, தனுஷ், விஜய் உள்ளிட்ட பலரும் அது போன்ற காட்சிகளில் நடிப்பதையும், போஸ்டருக்கு போஸ் கொடுப்பதையும் தவிர்த்து வருகின்றனர். ஆனால் ராதிகா இப்படி போஸ் கொடுத்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











