Don't Miss!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- News
"ஓவர் ஓவர்".. மின் இணைப்புடன் ஆதாரை இணைச்சிட்டீங்களா?.. 4 நாள்தான் இருக்கு.. அவகாசம் நீட்டிக்கப்படுமா
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக கூறிய வரு.. ராதிகா சரத்குமார் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: பட வாய்ப்புக்காக தன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் என நடிகை வரலட்சுமி கூறியதற்கு நடிகை ராதிக சரத்குமார் ரியாக்ட் செய்துள்ளார்.
Recommended Video
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். போடா போடி படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார்.
இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார் நடிகை வரலட்சுமி. தமிழில் கால் பதித்த கையோடு கன்னடம் மலையாளம் என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் வரு.

நெகட்டிவ் ரோல்
சசிக்குமாருடன் தாரை தப்பட்டை, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, விஜயுடன் சர்கார், தனுஷுடன் மாரி 2, விஷாலுடன் சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சர்க்கார் மற்றும் சண்டக்கோழி ஆகிய படங்களில் அவர் நடித்த நெகட்டிவ் ரோல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சிறந்த வில்லிக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.

படுக்கைக்கு அழைத்தார்கள்
தற்போது தமிழில் 7 படங்களை கை வசம் வைத்துள்ளார் வரலட்சுமி. அதேநேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை வரலட்சுமி, பட வாய்ப்புக்காக தன்னையும் சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்தார்கள் என தெரிவித்தார்.

பெரும் பரபரப்பு
அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய வரலட்சுமி, தமிழ் சினிமாவில் தான் என்னதான் வாரிசு நடிகையாக இருந்தாலும் கூட தனக்கும் அந்த அவலம் ஏற்பட்டு இருப்பது வேதனை அளிப்பதாக கூறினார். நடிகை வரலட்சுமி இவ்வாறு கூறியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சரியா சொல்லியிருக்க
இந்நிலையில் நடிகை வரலட்சுமியின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டு குறித்து அவரது தாயும் நடிகையுமான ராதிகா சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் சரியா சொல்லியிருக்க வரு.. உனக்கு பலமாக இருக்கிறேன் என கூறியுள்ளார். அவரது இந்த டிவிட்டை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

பெண்களுக்கு ஆதரவு
நடிகை வரலட்சுமி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக சக்தி என்ற பாதுகாப்பு அமைப்பையும் நடத்தி வருகிறார். #MeeToo-க்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் வரலட்சுமி, பெண்களுக்கு ஆதரவான நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.