»   »  "சூனியக்காரர்கள்... என்னையும் நீக்குங்கள்"... விஷால், கார்த்தியை திட்டி ராதிகா டிவிட்!

"சூனியக்காரர்கள்... என்னையும் நீக்குங்கள்"... விஷால், கார்த்தியை திட்டி ராதிகா டிவிட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் நடிகர் சங்க தலைவரான சரத்குமாரையும், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவியையும் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் காரசாரமான பதிவுகளை வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா. அதில், விஷால் மற்றும் கார்த்தியிடம் அவர் பல கேள்விகளை முன் வைத்துள்ளார்.

சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், நடிகர் சங்கத்தில் ஊழலில் ஈடுபட்டதாக கூறி அதன் முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Radhika Sarathkumar's angry tweet on actors

சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்த கேள்விகளுக்கு இன்னும் அவர்கள் தரப்பில் இருந்து தெளிவான பதில் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நடிகர் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், "நடிகர் சங்கத்தில் சூனியக்கார வேட்டை தொடங்கி விட்டது. 100 கோடி ஊழல் என்றார்கள். தற்போது வேறு தொகை சொல்கிறார்கள். எந்த விளக்கமும் கேட்கப்படமால், உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள். இது முதிரிச்சியில்லாத சிந்தனையாக தெரிகிறது.

இதற்கு என்னதான் முடிவு?.. எந்த ஆதரமும் இல்லாமல் புகார் கூறுகிறீர்கள். உங்களுக்குள் இருக்கும் மனக்சப்பை அழிக்க வேண்டும். இன்னும் நீங்கள் வளர வேண்டும். உங்களுக்குள் ஏராளாமன வெறுப்பு சிந்தனை உள்ளது" என்று காட்டமாக ராதிகா தெரிவித்துள்ளார்.

தனது இந்தப் பதிவுகளில் விஷாலையும், கார்த்தியையும் டேக் செய்துள்ள ராதிகா, கூடவே 'இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டதற்காக என்னையும் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குங்கள்..." எனவும் கூறியுள்ளார்.

English summary
Actress Radhika, the wife of sarathkumar has criticized action against her husband by actors association functionaries.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil