twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாதுகாப்பாக இருங்கள்… அன்புக்குரியவர்களை கவனித்துக் கொள்ளுங்கள்…. ராதிகா சரத்குமார் ட்விட் !

    |

    சென்னை : கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு நடிகை ராதிகா சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

    கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனா தொற்று15 ஆயிரத்தை தாண்டியது.

    கத்ரினா கைஃப்புக்கு கொரோனா...நிறுத்தப்பட்ட விஜய் சேதுபதியின் பாலிவுட் படம் கத்ரினா கைஃப்புக்கு கொரோனா...நிறுத்தப்பட்ட விஜய் சேதுபதியின் பாலிவுட் படம்

    இதுவரை 10 லட்சத்து 81 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    3.50 லட்சத்தை கடந்தது

    3.50 லட்சத்தை கடந்தது

    இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை, சுனாமி போல மிகப்பெரிய தாக்குதலை தொடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.50 லட்சத்தைக் கடந்துள்ளது.

    15,659 பேர்

    15,659 பேர்

    தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 15,659-த்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டுவருகின்றன. கடந்தவாரம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது.

    இறைச்சிக்கடை மூடல்

    இறைச்சிக்கடை மூடல்

    ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு என்பதால், சனிக்கிழமைகளிலேயே இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால், தமிழகஅரசு சனிக்கிழமைகளிலும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பாக இருங்கள்

    பாதுகாப்பாக இருங்கள்

    இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார், தனது ட்விட்டர் பக்கத்தில், பாதுகாப்பாக இருங்கள், தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள். வைரஸ் அழிவை உருவாக்கி அதை வேகமாக உருவாக்குகிறது. தயவுசெய்து உங்கள் அன்புக்குரியவர்களையும் உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள், உங்களை உயிரைக் காப்பாற்றுங்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    English summary
    Radhika Sarathkumar Twitter post
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X