»   »  15 வருடங்கள் கழித்து சூர்யாவுடன் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ராதிகா

15 வருடங்கள் கழித்து சூர்யாவுடன் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ராதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் எஸ் 3 படப்பிடிப்பில் நடிகை ராதிகா லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார். இதன் மூலம் ஏறத்தாழ 15 வருடங்களுக்குப்பின் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார் ராதிகா.

தமிழ் சினிமாவில் அம்மா வேடத்தில் ஜொலிக்கக்கூடிய நடிகைகளில் ராதிகாவிற்கும் ஒரு தனியிடம் உண்டு. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படம் ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது.

Radhika Share Screen Space with Surya

நானும் ரவுடிதான் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தற்போது மீண்டும் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக தர்மதுரை படத்தில் ராதிகா நடித்து வருகிறார்.

இந்நிலையில் சூர்யாவின் எஸ் 3 படப்பிடிப்பில் நடிகை ராதிகா தற்போது இணைந்திருக்கிறார். இது குறித்து அவர் " எஸ் 3 படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் வந்திருக்கிறேன்.

சூர்யாவுடன் இணைந்து மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். சூர்யா நடித்த காதலே நிம்மதி, உயிரிலே கலந்தது போன்ற படங்களில் சூர்யாவின் அம்மாவாக ராதிகா நடித்திருந்தார்.

கடைசியாக 2௦௦௦ மாவது ஆண்டில் வெளியான உயிரிலே கலந்தது படத்திற்குப் பின் 15 வருடங்கள் கழித்து, மீண்டும் எஸ் 3 படத்தில் சூர்யாவுடன் இணைந்து ராதிகா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல இந்தப் படத்தில் அவர் சூர்யாவின் அம்மாவாக நடிக்கிறாரா?இல்லை வேறு ஏதேனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாரா?என்பது தெரியவில்லை.

English summary
Radhika Share Screen Space with Surya in S3. She wrote on Twitter "Lovely to be back in Vizag, Singam 3 shoot Suriya_offl pleasure to share screen space with u again".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil