»   »  ஏன், எதற்கு, எப்படி?: நடிகர் சங்கத்தை வறுத்தெடுத்த ராதிகா #NadigarSangam

ஏன், எதற்கு, எப்படி?: நடிகர் சங்கத்தை வறுத்தெடுத்த ராதிகா #NadigarSangam

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுக்குழு மற்றும் நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது குறித்து நடிகை ராதிகா ட்விட்டரில் கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தடியடி, தள்ளுமுள்ளு, கார் கண்ணாடி உடைப்பு என இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில் கூட்டம் நடந்தது.

நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து நடிகை ராதிகா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கமிஷனர்

#NadigarSangam கூட்டம் நடத்தும் இடத்தை மாற்ற சனிக்கிழமை எந்த கமிஷனர் அனுமதி அளித்தார். அனுமதி தொடர்பான கடிதத்தை நான் பார்க்க விரும்புகிறேன்.

நோட்டீஸ்

#NadigarSangam நீங்கள் 21 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளித்திருக்க வேண்டும். அதை எப்படி மீறலாம். நானும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். என்னிடம் கூறுங்கள்.

ஏன்?

#NadigarSangam நிகழ்ச்சி நிரலை ஏன் அளிக்கவில்லை. ஆயுட்கால உறுப்பினரான எனக்கு ஏன் தெரிவிக்கவில்லை? குறைந்தபட்ச நபர்கள் கூட இல்லாமல் பொதுக்குழு கூட்டத்தில் எப்படி ஒப்புதல் வாங்கினீர்கள்? நிரூபியுங்கள்

சஸ்பெண்ட்

#NadigarSangam நீங்கள் எப்படி சஸ்பெண்ட் செய்யலாம்? யாருடனும் ஆலோசிக்காமல் முடிவு, இது நீதிமன்ற அவமதிப்பு அல்லவா???

English summary
Actress Radhika Sarathkumar has shooted some questions to Nadigar Sangam in connection with Sarath Kumar issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil