»   »  ஐசரி கணேஷிடம் வாங்கிய கடனை அடைத்ததற்கு வாழ்த்துகள்.. விஷாலுக்கு ராதிகா 'ஷொட்டு'

ஐசரி கணேஷிடம் வாங்கிய கடனை அடைத்ததற்கு வாழ்த்துகள்.. விஷாலுக்கு ராதிகா 'ஷொட்டு'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குறுகிய காலத்தில் நடிகர் சங்கக் கடனை அடைத்ததற்கு வாழ்த்துக்கள் என நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷாலை, ராதிகா பாராட்டியிருக்கிறார்.

கடன் தொகையை அடைக்கவும், நடிகர் சங்கக் கட்டிடத்தை கட்டுவதற்காகவும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை கடந்த 17 ம் தேதி நடிகர் சங்கம் நடத்தியது.

Radhika Wishes Nadigar Sangam for debt Clears

தற்போது நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைத்த வருவாயை வைத்து நடிகர் சங்கத்தின் கடனை முழுமையாக அடைத்து விட்டதாக, பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்திருந்தார்.

மேலும் 8 கோடி ரூபாய் நடிகர் சங்க அறக்கட்டளை கணக்கில் இருப்பதாகவும் விஷால் பெருமிதத்துடன் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை ராதிகா, விஷாலுக்கு தன்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் "ஐசரி கணேஷிடமிருந்து வாங்கிய கடனை சிறிய காலகட்டத்தில் அடைத்த நடிகர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்" என்று பாராட்டியிருக்கிறார்.

English summary
Radhika says "congrats on returning short term loan NS taken frm Isari Ganesh.nxt don't borrow do wth own money".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil