»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களை பிடித்து தண்டிக்க வேண்டும் என நடிகர்சரத்குமார் கோரியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி சரத்குமாரின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான ராதிகாஆளுனரிடம் மனு கொடுத்துள்ளார்.

வியாழக்கிழமை சரத்குமார் வீட்டின் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டதுஅப்போது சரத்குமார் வீட்டில் இல்லை. இது பற்றி சரத்குமாரின் மனைவி ராதிகாசரத்குமாருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தார். தாக்குதல் நடத்தியவர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார்.

என் வீட்டில் நடந்த தாக்குதல் குறித்து ராதிகா போன் செய்து சொன்னதும் நான்அதிர்ச்சி அடைந்தேன்.

தேர்தல் முடிந்ததும் என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தேர்தல் நேரம்அதனால் தாக்குதல் நடக்கிறது என்று நான் விட்டுவிட்டேன்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக என் வீட்டின் மீது தாக்குதல்நடத்துப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்களைபார்த்தால் தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறதா அல்லது வேறு ஏதாவது அடிமைநாட்டில் இருக்கிறதாஎன்ற சந்தேகம் எழுகிறது.

கலை உலகில் இருப்பவர்கள் வேறு வேறு கட்சிகளில் இருந்தாலும் எங்களுக்குள் எந்தவிதமான பிரிவினையும் கிடையாது. வேண்டும் என்றே தாக்குதல் நடத்தி பிரச்சனைஉண்டாக்க நினைப்பவர்களை சும்மா விடக்கூடாது.

நானும், ராதிகாவும சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதால் எப்போது வீட்டிற்குவருவோம் என தெரியாது. உரிய பாதுகாப்பு இல்லாமல் எப்படி வாழ்வது. தாக்குதல்நடத்தியவர்களை பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார் சரத்குமார்.

தங்கள் வீட்டில் நடந்த தாக்குதல் குறித்தும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராதிகா தமிழக ஆளுனரை நேரில் சந்தித்துமனு கொடுத்துள்ளார்.

Please Wait while comments are loading...