»   »  அன்னையர் தினத்தில் அம்மா கோவிலை திறந்து வைத்த ராகவா லாரன்ஸ்

அன்னையர் தினத்தில் அம்மா கோவிலை திறந்து வைத்த ராகவா லாரன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்னையர் தினமான இன்று நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தாய்க்கு கட்டிய கோவிலை திறந்து வைத்துள்ளார்.

நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் தனது தாய் மீது அதிக பாசம் வைத்துள்ளார். இந்நிலையில் தனது தாய்க்கு கோவில் கட்டப்படும் என்று கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தார்.

Ragahva Lawrence opens Amma temple

இதையடுத்து அவரின் தாய் கண்மணி அம்மையாரின் சிலை ராஜஸ்தானில் செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் லாரன்ஸ் தனது தாய்க்கு கோவிலை கட்டி சிலையை நிறுவினார்.

தாய் கோவிலை திறக்க அன்னையர் தினத்தை விட நல்ல நாள் இருக்காது என்று அவர் அந்த நாளை தேர்வு செய்தார். அதன்படி அன்னையர் தினமான இன்று தாயின் கோவிலுக்கு திறப்பு விழா நடத்தியுள்ளார்.

கோவிலை சண்டை பயிற்சியாளரான சூப்பர் சுப்பராயன் திறந்து வைத்தார். அந்த கோவிலில் காயத்ரி தேவி சிலை மற்றும் சிவலிங்கமும் உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது 1000 வயதான பெண்களுக்கு ராகவா லாரன்ஸ் சேலை வழங்கினார்.

English summary
Actor Raghava Lawrence has opened the temple built with his mother's statue. The temple is aptly opened on mother's day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil