twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ 10 கோடி கொடுத்தாரா ரஜினி? - மந்த்ராலய நிர்வாகம் விளக்கம்

    By Shankar
    |

    Rajini
    மந்த்ராலயம்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு ரூ 10 கோடியை ரஜினிகாந்த் நன்கொடையாக அளித்ததாக வந்த செய்தி குறித்து மந்த்ராலயம் விளக்கம் அளித்துள்ளது.

    இந்த செய்தியை ரஜினியின் அலுவலகத் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. ரஜினி வீட்டில் கேட்டபோது, இந்த செய்தியில் உண்மையில்லை என்று தெரிவித்தனர்.

    ஆனால் ராகவேந்திரர் கோயில் நிர்வாகிகள் இருவர் பெயரில் இந்த அறிக்கை வந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

    ராகவேந்திரரின் தீவிர பக்தர் என்ற முறையில், விளம்பரமின்றி ரஜினி உதவியிருப்பார் என்ற கருத்து அனைவர் மத்தியிலும் இருந்தது வந்தது.

    ஆனால் இன்று ராகவேந்திரர் கோயில் நிர்வாகத்திலிருந்து ஒரு விளக்கம் வெளியாகியுள்ளது.

    அதில், "ராகவேந்திரர் கோவிலுக்கு நன்கொடை கேட்டு ரஜினி மனைவி லதா ரஜினிகாந்த்தை கோயில் நிர்வாகம் அணுகியது உண்மைதான். எங்கள் கோவிலில் காரியதரிசி சுவாமிஜி ஸ்ரீசுயமேந்திரசார்யா இதற்கான முயற்சியில் ஈடுபட்டார். லதா ரஜினியை சந்தித்து நன்கொடை கேட்டார்.

    கோவிலில் அவசரமாக செய்ய வேண்டிய 3 பணிகள் உள்ளன. அதற்கு நிதி தேவைப்படுவதால் அணுகினோம். ஆனால் ரூ. 10 கோடி ரஜினி தரப் போவதாக வெளியான தகவல் உண்மையல்ல.

    நாங்கள் இதுவரை இந்த விஷயமாக ரஜினியை சந்தித்து பேசவில்லை. அவர் தரப்பில் எவ்வளவு தொகை நன்கொடையாக தரப்படும் என்றும் கூறப்படவில்லை. ரஜினி விருப்பப்பட்டு எவ்வளவு பணம் தந்தாலும் ஏற்றுக் கொள்வோம். ரஜினி நன்கொடை அளித்ததும் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்," என்றார்.

    English summary
    Sri Ragavendra Temple administration denied the reports on Rajini's Rs 10 cr donation to the temple.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X