»   »  ரஜினியுடன், ராகவா லாரன்ஸ் இணையும் அறிவிப்பு நாளை வராது... தள்ளிவைப்புக்கு காரணம் என்ன?

ரஜினியுடன், ராகவா லாரன்ஸ் இணையும் அறிவிப்பு நாளை வராது... தள்ளிவைப்புக்கு காரணம் என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ம் தேதி தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், 2021-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

ரஜினி அரசியல் வருகை குறித்து அரசியல் கட்சிகள் தான் கருத்து சொல்லி வருகின்றன. ஒரு சில நடிகர்கள் தவிர்த்து அவரது ஆதரவாளர்கள் பலரும் மௌனமாக இருந்து வருகிறார்கள்.

நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினி கட்சியில் இணைந்து அவருக்கு காவலனாக இருக்கப்போவதாக அறிவித்தார். இந்த நிலையில் லாரன்ஸின் பத்திரிகையாளர் சந்திப்பு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அரசியலுக்கு வரும் ரஜினி

அரசியலுக்கு வரும் ரஜினி

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. விரைவில் கட்சி பெயர், கொடி, சின்னம், செயல்திட்டம் ஆகியவற்றை அறிவிக்க இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களையும் சந்திக்க இருக்கிறார்.

ரஜினியின் தீவிர ரசிகர்

ரஜினியின் தீவிர ரசிகர்

ராகவா லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர். இவர் அடிக்கடி ரஜினியை சந்திப்பார். ரஜினியைப் போலவே ராகவேந்திர பக்தரும் கூட. ரஜினி பிறந்த நாளை ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாடுவார். தற்போது ரஜினி கட்சியை முறைப்படி அறிவிக்கும் முன்பே தன்னை அவருடன் இணைத்துக் கொள்ள இருக்கிறார்.

ரஜினியை வரவேற்கும் பாடல்

ரஜினியை வரவேற்கும் பாடல்

அரசியலுக்கு ரஜினிகாந்தை வரவேற்கும் விதமாகவும், அவருக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும் நடிகா் ராகவா லாரன்ஸ் டிசம்பர் 30-ம் தேதி புதிய பாடல் ஒன்றை வெளியிட்டார். ராகவா லாரன்ஸ் வெளியிட்ட அந்தப் பாடலை ரஜினி ரசிகர்களுக்கு டெடிகேட் செய்தார்.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் "ரஜினியின் காவலன் நான்" என்று அறிவித்தார். ஜனவரி 4-ம் தேதி மாலை 4 மணிக்கு அம்பத்தூரில் தன் தாய்க்கு கட்டியிருக்கும் கோவிலுக்கு பூஜை செய்து விட்டு இதனை முறைப்படி பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

நாளை அறிவிப்பு

நாளை அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் ரஜினியோடு இணையவிருக்கும் அறிவிப்பிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்துடன் இணையப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவரின் ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

அறிவிப்பு தள்ளிவைப்பு

இந்நிலையில், திட்டமிட்டிருந்த இந்த பத்திரிகையாளர் சந்திப்பையும், தனது அறிவிப்பையும் வரும் ஜனவரி 7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் ராகவா லாரன்ஸ். இந்த தள்ளிவைப்பிற்கான காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

லாரன்ஸ் ரசிகர் மறைவு

லாரன்ஸ் ரசிகர் மறைவு

தனது தீவிர ரசிகரான சேகர் என்பவர் நேற்று காலமான செய்தியை அறிந்துள்ளார் லாரன்ஸ். அவருக்கு சமீபத்தில் தான் கல்யாணமாகி அவரது மனைவி கார்ப்பமாகியுள்ளார். இந்த செய்தி கேட்டு வருத்தப்பட்டு நாளை நடத்த திட்டமிட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பை வருகிற 7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார் லாரன்ஸ்.

English summary
Actor Rajinikanth announced on December 31 that he would come to politics and would contest in 2021 assembly elections. Actor Raghava Lawrence announced that he would joins with Rajini party. In this case, Raghava Lawrence has postponed his announcement date on January 7. Lawrence has tweeted the reason for this postponement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X