»   »  'சிவலிங்கா'விற்காக இணையும் ராகவா லாரன்ஸ்-அனுஷ்கா?

'சிவலிங்கா'விற்காக இணையும் ராகவா லாரன்ஸ்-அனுஷ்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவலிங்கா படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து, அனுஷ்கா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த பி.வாசு, சிவராஜ்குமாரை வைத்து கன்னட மொழியில் இயக்கிய படமே சிவலிங்கா.

சிவராஜ்குமார், வேதிகா, சக்தி ஆகியோரின் நடிப்பில் வெளியான சிவலிங்கா சாண்டல்வுட்டின், மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது.

சந்திரமுகி 2

சந்திரமுகி 2

இப்படத்தை பார்த்த ரஜினி படம் தன்னை மிகவும் கவர்ந்ததாக வாசுவைப் பாராட்டியிருந்தார். மேலும் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிக்க ஆர்வம் காட்டியதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் ரஜினி நடிப்பில் சந்திரமுகி படத்தின் 2 வது பாகமாக, இப்படத்தை தமிழில் ரீமேக் செய்திட வாசு திட்டமிட்டிருந்தார்.

ராகவா லாரன்ஸ் - அனுஷ்கா

ராகவா லாரன்ஸ் - அனுஷ்கா

தற்போது இந்தப் படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் - அனுஷ்கா இருவரையும் பி.வாசு அணுகியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேய்ப்படங்களில் புகழ் பெற்றவர் லாரன்ஸ். அதேபோல அருந்ததி படத்தின் மூலம் அனுஷ்கா அடைந்த புகழ் அனைவருக்குமே தெரியும். இதனால் இருவரையும் ஒன்றாக நடிக்க வைக்கும்போது, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பது வாசுவின் எண்ணமாக இருக்கிறதாம்.

சிவலிங்கா

சிவலிங்கா

ஒரு கொலைக்கான காரணத்தை கண்டறிந்து அதன் முடிச்சுகளை அவிழ்க்கும் சிஐடி அதிகாரியாக, இப்படத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படத்திற்கு சாண்டல்வுட்டின் வசூலைக் குவித்த படங்களில் முக்கியமான இடம் கிடைத்திருக்கிறது.

தமிழில்

தமிழில்

தற்போது லாரன்ஸ்-அனுஷ்கா இருவருமே அவரவர் படங்களில் பிஸியாக இருந்து வருகின்றனர். இதனால் சிவலிங்கா தமிழ் ரீமேக்கில் இருவரும் நடிக்க ஒப்புக்கொள்வார்களா? என்பது தெரியவில்லை. எனினும் இதுகுறித்த முழுமையான தகவல்கள், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said Raghava Lawrence - Anushka Starrer in Shivalinga Tamil Remake.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil