»   »  ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட 1100 கிலோ கேக் வெட்டும் ராகவா லாரன்ஸ்!

ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட 1100 கிலோ கேக் வெட்டும் ராகவா லாரன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட பிரமாண்டமாக 1100 கிலோ கேக்கை மாணவர்களுடன் சேர்ந்து இன்று வெட்டுகிறார் ராகவா லாரன்ஸ்.

ஜல்லிக்கட்டுக்காக நடந்த மாணவர் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தில் தாமாகப் போய் பங்கேற்று, சில உதவிகளையும் செய்தார் ராகவா லாரன்ஸ். இதற்காக அவர் முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்தைச் சந்தித்தார். ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியடைந்ததுமே, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பேன் என்றும் தெரிவித்தார்.

Raghava Lawrence celebrates Jallikkattu success

இப்போது ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட முடிவெடுத்துள்ளார். மிகவும் கண்ணியத்துடனும் அமைதியாகவும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், கடைசி நாளில் வன்முறைக் களமாக மாறியது. அதில் மிகுந்த மன வருத்தம் அடைந்ததாகத் தெரிவித்த ராகவா லாரன், இந்த வெற்றியை பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்படி போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை 1100 கிலோ பிரமாண்டமான கேக் வெட்டி இன்று கொண்டாடுகிறார் லாரன்ஸ். இதற்கு முன்பு 1040 கிலோ கேக் தான் உலக ரெகார்டாக பதிவானது. அதை முறியடிக்கும் விதமாக 1100 கிலோ அளவில் திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள் முன்னிலையில் கேக்வெட்டி கொண்டாடுகிறார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள வாவின் சிக்னல் அருகே இந்த கொண்டாட்டம் நடக்கவிருக்கிறது.

English summary
Actor - Director Raghava Lawrence is celebrating the success of Jallikkattu protests by cutting a 1100 kg cake today at Ambattur, Chennai

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil