»   »  பதவி ஆசை இல்லாத என் தலைவர் ரஜினியையா விமர்சிக்கிறீர்கள்?: ராகவா லாரன்ஸ் கொந்தளிப்பு

பதவி ஆசை இல்லாத என் தலைவர் ரஜினியையா விமர்சிக்கிறீர்கள்?: ராகவா லாரன்ஸ் கொந்தளிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் இலங்கை பயணத்தை ரத்து செய்தது குறித்து சிலர் கடுமையாக விமர்சிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

தமிழக அரசியல் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளார். இது குறித்து சிலர் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

தலைவர்

தலைவர்

அன்புள்ள நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும்! கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், தலைவர் ரஜினிகாந்த் குறித்த தங்கள் பார்வையை, ஆங்காங்கே பலரும் தெரிவித்து வருவதைக் காண முடிகிறது.

ரசிகன்

ரசிகன்

நான், அவரது மிகப்பெரிய ரசிகன் மற்றும் தொண்டன் என்ற முறையில், ஏன் அவர் ஒரு என்னுடைய தன்னிகரில்லாத தலைவராக இருக்கிறார் என்று பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

அரசியல்

அரசியல்

பத்து பேர் பின்னால் இருந்தாலே, கட்சி ஆரம்பித்து, ஆட்சிக்கு வர ஆசைப்படும் இக்காலத்தில், கோடிக்கணக்கான உயிர் ரசிகர்கள் உடனிருந்தும், அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர் தான் என் தலைவர்.

பண ஆசை

பண ஆசை

இரண்டாவதாக, இத்தனை பெரிய ரசிகர்படை வைத்திருக்கும் என் தலைவர், மிக எளிதாக, ஆறு மாதத்திற்கு ஒரு படம் நடித்து வெளியிட்டு, மிகப்பெரும் பணம் சேர்க்கலாம். ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வது, அவர் பணத்தின் மேல் ஆசை இல்லாதவர் என்பதை நிரூபிக்கிறது.

பிரதமர்

பிரதமர்

பிரதமர் அவர்களது நம் மாநில வருகையின்போது, அவர் சந்திக்க விரும்பிய, சந்தித்த ஒரே தலைவர் அநேகமாக சூப்பர் ஸ்டார் மட்டுமாகத்தான் இருக்கும். அவரது நன்மதிப்பும், போலித்தனமின்மையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஆன்மீகம்

ஆன்மீகம்

இந்தியாவிலேயே, நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் இருந்துவரும்போதும், நாட்டிலேயே மிகப்பிரபலமான நடிகராக இருக்கும்போதும், எந்தவிதமான ஆசையும், ஆணவமும் இல்லாமல், ஆன்மீக வழியைத் தேர்ந்தெடுத்து, பயணம் செய்பவர் அவர். இவை, தலைவரை மதித்து வணங்கும் என் ஒருவனின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிப்பதற்கு காரணமும் இதுதான்.

தொண்டர்கள்

தொண்டர்கள்

சிலர், தலைவரைக் குறித்து தவறாக பேச நினைக்கலாம். ஆனால், அவரை நன்கு அறிந்தவர்கள், அவரை மதித்து வணங்குவார்கள். அந்த கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

English summary
Actor Raghava Lawrence who is a die hard fan of Rajinikanth took to facebook to defend his Thalaivar's decision of cancelling Sri Lankan tour.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil