ராகவா லாரன்சிற்கு கெளரவ டாக்டர் பட்டம்...யார், எதுக்கு கொடுத்திருக்காங்க தெரியுமா ?
சென்னை : ராகவா லாரன்ஸ், டான்ஸ் மாஸ்டர், நடிகர் என்பதை தாண்டி அவர் சமுக ஆர்வலர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதனாலேயே லாரன்சிற்கு ரசிகர்கள் என்பதை தாண்டி, அபிமானிகள் அதிகம்.

இவரின் இந்த சமுக பணிகளை பாராட்டி, சர்வேதச ஊழலுக்கு எதிரான மற்றும் மனித உரிமைகள் கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமாக விளங்கும் இந்த அமைப்பு வழங்கி உள்ள கெளரவத்தால் லாரன்சிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், லாரன்ஸ் சார்பில் அவருடைய அம்மா கண்மணி இந்த விருதினை பெற்றார். இது தொடர்பாக லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமுக சேவைக்காக டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்திருப்பது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம். இதற்காக சர்வேதச ஊழலுக்கு எதிரான மற்றும் மனித உரிமைகள் கழகத்திற்கு எனது இதயம் கனிந்த நன்றிகள். இந்த விருது எனக்கு ஸ்பெஷலான ஒன்று. ஏனெனில் இந்த விருதினை என் சார்பாக என் அம்மா வாங்கி உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
டான்ஸ் மாஸ்டராக இருந்தது, ஒரு பாடல்களுக்கு மட்டும் நடனமாடி வந்த லாரன்ஸ், பிறகு ஹீரோவாக நடிக்க துவங்கினார். பல படங்களில் நடித்திருந்தாலும் இவரே இயக்கி நடித்த முனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற பேய் படங்கள் தான் லாரன்ஸிற்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தன.வரிசையாக லாரன்ஸ் நடித்த பேய் படங்கள் வெற்றி பெற்றதால் பல படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்துள்ளது.
நடிகர் லாரன்ஸ் தற்போது ருத்ரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கி உள்ளார். ருத்ரன் படத்தின் முலம் அவர் டைரக்டராக அறிமுகமாகிறார். ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சரத்குமார் வில்லனாக நடித்துள்ளார்.லாரன்சிற்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற டைரக்டர் வெற்றிமாறன் தான் கதை எழுதி உள்ளார். இதோடு, பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்திலும் லாரன்ஸ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடிவேலுவுடன் லாரன்ஸ் இணைந்து நடிக்கும் சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். லைகா ப்ரொடக்னுஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











