»   »  'இளைய தளபதிக்கு இல்லாததா...' விஜய்க்காக விட்டுக் கொடுத்த ராகவா லாரன்ஸ்!

'இளைய தளபதிக்கு இல்லாததா...' விஜய்க்காக விட்டுக் கொடுத்த ராகவா லாரன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அடுத்தடுத்து தான் பதிவு செய்து வைத்திருந்த தலைப்புகளை தனது நண்பர்களுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறார் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸின் உதவும் குணம் எல்லோருக்குமே தெரிந்ததுதான். தமிழ் சினிமாவில் ஏழைகளுக்கு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு பெருமளவில் உதவி செய்து வரும் அவர், சூப்பர் ஸ்டார் தொடங்கி, அஜீத், விஜய் என அனைவருக்குமே நண்பராகத் திகழ்கிறார்.

விட்டுக் கொடுத்தல்

விட்டுக் கொடுத்தல்

தான் நடிப்பதற்காக பதிவு செய்துள்ள படங்களின் தலைப்புகளையும் தனது நட்பு நடிகர்களுக்காக அவ்வப்போது விட்டுக் கொடுத்துவிடுகிறார்.

வேதாளம்

வேதாளம்

அஜீத் நடித்த 57-வது படத்தின் தலைப்பான வேதாளம் ராகவா லாரன்ஸ் பதிவு செய்து வைத்திருந்ததுதான். அஜீத் அந்தத் தலைப்பை விரும்புகிறார் எனத் தெரிந்ததும் 'எடுத்துக்கங்க தல' என விட்டுக் கொடுத்தார்.

விஜய்க்கும் தலைப்பு தானம்

விஜய்க்கும் தலைப்பு தானம்

வேதாளம் ஹிட்டடித்த ராசியோ என்னமோ... அடுத்து விஜய்யும் தன் படத்துக்கான தலைப்பை ராகவாவிடம்தான் கேட்டுப் பெற்றுள்ளார். விஜய் படத்துக்கு பைரவா என தலைப்பு முடிவு செய்து சேம்பரில் பதிவு செய்யப் போனால், அதை ஏற்கெனவே ராகவா லாரன்ஸ் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

இளைய தளபதிக்கு இல்லாததா...

இளைய தளபதிக்கு இல்லாததா...

இதையடுத்து ராகவா லாரன்சிடம் ‘பைரவா' தலைப்பை விட்டுக் கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளனர். இந்த தலைப்பில் அவர் ஏற்கனவே நடிக்கத் தயாராக இருந்தார். கேட்டது நண்பர் விஜய் ஆச்சே... 'இளைய தளபதிக்கு இல்லாததா... எடுத்துக்கங்க பாஸ்' என உற்சாகப் புன்னகையுடன் சம்மதித்தாராம்!

English summary
Sources says that Vijay's 60th movie Bharava title has been given by Raghava Lawrence
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil