»   »  "மனதை மாற்றிய அந்த சம்பவம்..." - ரஜினி, கமலுக்கு மாற்றாக ராகவா லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு!

"மனதை மாற்றிய அந்த சம்பவம்..." - ரஜினி, கமலுக்கு மாற்றாக ராகவா லாரன்ஸ் எடுத்த அதிரடி முடிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அரசியலுக்கு வர இருக்கும் ரஜினியும், கமலும் தங்கள் இடத்துக்கு ரசிகர்களை வரவழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்துக்கு ஆதரவாக அரசியல் களத்தில் குதிக்க இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் ரசிகர்களை சென்னைக்கு வரவழைக்காமல் அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ள இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

அரசியல் பிரவேசம் தரவிருக்கும் ரஜினியும், கமலும் ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்கள். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்துக்கு ஆதரவாக அரசியல் களத்தில் குதிக்க இருக்கிறார்.

ரசிகர்களுடன் புகைப்படம்

ரசிகர்களுடன் புகைப்படம்

ரஜினி, கமல் போல ராகவா லாரன்ஸ் ரசிகர்களைச் சென்னைக்கு வரவழைக்காமல் அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ள இருக்கிறார். இதுகுறித்து ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரசிகர் இறப்பால் வேதனை

ரசிகர் இறப்பால் வேதனை

"என்னை நேரில் சந்தித்து புகைப்படம் எடுக்க எனது ரசிகர்களில் ஒருவரான கடலூரைச் சேர்ந்த சேகர் சென்னை வரும் போது விபத்தில் இறந்து போனார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதுடன் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டேன். அவரது இழப்பு எனக்கு மிகுந்த வலியையும், வேதனையையும் ஏற்படுத்தி விட்டது."

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

அதனால் நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். இனி எந்த ஒரு ரசிகரும் என்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம். வரும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க விரும்புகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

இந்த வாரம் சந்திப்பு

இந்த வாரம் சந்திப்பு

ரசிகர்களைச் சந்திக்கும் இடம் நேரம் தேதி ஆகிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும். முதல் கட்டமாக வரும் 7-ம் தேதி சேலத்தில் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள உள்ளேன்." என ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Raghava Lawrence enters politics to support Rajinikanth. Raghava Lawrence plans to go to their place and take a photo with fans. Lawrence fan met accident when come to meet lawrence. Thus, Lawrence take this decision.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil