Don't Miss!
- News
தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுக்கவில்லை.. விவசாயிகளுக்கு திட்டங்களும் இல்லை.. திருச்சி சிவா விமர்சனம்
- Lifestyle
இப்படி முட்டை தோசை செஞ்சா... சைடு டிஷ் செய்யவே தேவையில்ல.. ட்ரை பண்ணி பாருங்க...
- Finance
வருமான வரி சலுகை முதல் வரி அதிகரிப்பு வரை.. சாமானியர்களுக்கு பட்ஜெட்டில் என்ன பலன்?
- Sports
வாழ்வா? சாவா? போட்டியில் ரிஸ்க்.. டாஸில் ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவு.. இந்திய அணி ஜெயிக்குமா??
- Automobiles
பெண் செய்த காரியத்தால் நொறுங்கிய கடை! இதனால கூட விபத்து நடக்குமா! சுத்தி இருந்த எல்லாரும் ஆடி போயிட்டாங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரஜினிக்கே வினை வைக்கும் ராகவா லாரன்ஸ்… ஜெயிலர் படத்தை கார்னர் செய்யும் சந்திரமுகி 2?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ஜெயிலர் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, உடனடியாக ரிலீஸ் தேதியை முடிவு செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், ஷங்கரை தொடர்ந்து ராகவா லாரன்ஸும் ஜெயிலர் படத்தை கார்னர் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு சலாம் போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..லால் சலாம் பட வேலைகள் தொடங்கின!

ஜெயிலர் செகண்ட் ஷெட்யூல்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி நடித்து வரும் ஜெயிலர் மீது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கலெக்ஷனில் அண்ணாத்த கல்லா கட்டினாலும் மோசமான திரைக்கதையால் ரொம்பவே நெகட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் ஜெயிலர் படத்தில் தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினி தீயாக வேலை செய்து வருகிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் என சூப்பர் ஹிட் கொடுத்த நெல்சன், 'பீஸ்ட்' படத்தில் மொத்தமாக சொதப்பிவிட்டார். இதையும் மீறி ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கு கொடுத்துள்ளார் ரஜினி.

ஜெயிலருக்கு வந்த சிக்கல்
ஏற்கனவே நெல்சன் மீது நம்பிக்கையில்லாமல் தொடங்கிய ஜெயிலர் ஷூட்டிங், இப்போது அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் சிவராஜ்குமாரும் ஜெயிலர் படத்தில் நடிப்பது உறுதியானது. இதெல்லாம் ஜெயிலர் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்தாலும், இப்போது ரிலீஸ் தேதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். ரஜினிக்கு எப்போதுமே தமிழ்ப் புத்தாண்டில் அவரது படங்கள் வெளியாவது செண்டிமெண்டான விஷயம். அதேபோல், ஜெயிலர் படத்தையும் அடுத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால், ஜெயிலருக்குப் போட்டியாக ராகவ லாரன்ஸும் களமிறங்கவுள்ளாராம்.

சந்திரமுகி 2 ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிதீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், இப்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த சந்திமுகி படத்தின் இரண்டாம் பாகம் தான் இது. பி வாசு இயக்கும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படமும் அடுத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால், ஜெயிலர் படத்தின் கலெக்ஷனில் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது.

ஆர்சி 15, பொன்னியின் செல்வன் 2
ஏற்கனவே ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 திரைப்படமும் தமிழ்ப் புத்தாண்டை குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது சந்திரமுகி இரண்டாம் பாகமும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது ஜெயிலர் படத்துக்கு தலை வலியாக அமைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகலாம் எனக் கூறப்படுகிறது. முதல் பாகத்தை போலவே பொன்னியின் செல்வன் 2க்கும் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதனால், ஜெயிலர் படத்துக்கு நினைத்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.