கையில் சரக்கு பாட்டிலுடன் மிரட்டும் ராகவா லாரன்ஸ்.. ருத்ரன் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புடன் இரண்டாவது லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஆனால், அதில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், கையில் சரக்கு பாட்டிலுடன் சோபாவில் வெறித்தனமாக ராகவா லாரன்ஸ் உட்கார்ந்திருக்கும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

காஞ்சனா சீரிஸ்

காஞ்சனா சீரிஸ்

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா வரிசை படங்கள் எல்லாம் தியேட்டரில் வசூலை வாரி குவித்தன. காமெடி மற்றும் ஹாரர் கலந்து முனி, காஞ்சனா, காஞ்சனா 2 படங்களை உருவாக்கி 100 கோடி வசூலையும் சாதித்தார் ராகவா லாரன்ஸ். காஞ்சனா 3 திரைப்படம் அந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை என்றாலும், போதுமான வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

ருத்ரன் ஃபர்ஸ்ட் லுக்

ருத்ரன் ஃபர்ஸ்ட் லுக்

திருவிழா ராட்டினங்கள் சுற்ற அந்த இடத்தில் எதிரிகளை பந்தாடுவது போன்ற ஆக்ரோஷமான லுக்குடன் ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ராகவா லாரன்ஸ் வரும் கிறிஸ்துமஸ்க்கு படம் வெளியாகும் என அறிவித்தார். முன்னதாக இந்த ஆண்டு சம்மருக்கே ருத்ரன் படம் வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

கையில் சரக்குடன்

கையில் சரக்குடன்

இந்நிலையில் தற்போது ருத்ரன் படத்தின் செகண்ட் லுக் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் மிரட்டலான லுக்குடன் கையில் சரக்கு பாட்டிலை பிடித்துக் கொண்டு ராகவா லாரன்ஸ் வெறித்தனமான போஸ் கொடுத்துள்ளார். அவர் அருகே தரையில் மேலும், சில சரக்கு பாட்டில்களும் உள்ளன. Evil is not born.. It is Created என்கிற வாசகத்துடன் ரிலீஸ் தேதியும் அறிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

ரிலீஸ் எப்போ

ரிலீஸ் எப்போ

தீபாவளிக்கு பிரின்ஸ், சர்தார் படங்கள் வரும் நிலையில், கிறிஸ்துமஸ் படத்தை புக் செய்து விட்டார் ராகவா லாரன்ஸ். டிசம்பர் 23ம் தேதி ருத்ரன் படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கதிரேசன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து உள்ளார். டிசம்பரிலும் அப்போ ஏகே61 வெளியாவது கஷ்டமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

சந்திரமுகி 2

சந்திரமுகி 2

ருத்ரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த நிலையில், அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராகி விட்டார் ராகவா லாரன்ஸ். சந்திரமுகியில் நடித்த வடிவேலு இந்த படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ச்ந்திரமுகி பேயாக த்ரிஷா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X