»   »  6 வயது சிறுவன் உயிரைக் காப்பாற்றிய லாரன்ஸ்.. இதுவரை 143 ஆபரேஷன்கள் சக்சஸ்!

6 வயது சிறுவன் உயிரைக் காப்பாற்றிய லாரன்ஸ்.. இதுவரை 143 ஆபரேஷன்கள் சக்சஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
லாரன்ஸின் அடுத்த படம் டைட்டில் கால பைரவா

சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் ஏழை எளியவர்கள், வசதியில்லா குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.

இதயக் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனது அறக்கட்டளையின் மூலமாக இலவச ஆபரேஷன் செய்வதற்கான உதவிகளையும் செய்து வருகிறார்.

சமீபத்தில், ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பிரதீப் என்ற ஆறு வயது சிறுவனின் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

லாரன்ஸ்

லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் ஏழை எளியவர்கள், வசதியில்லா குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். அவரது உதவியின் மூலம் பல குழந்தைகள், சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதய ஆபரேஷன்

மேலும், இதயக் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனது அறக்கட்டளையின் மூலமாக இலவச ஆபரேஷன் செய்வதற்கான உதவிகளைச் செய்து வருகிறார் லாரன்ஸ். இதுவரை 142 குழந்தைகளின் இதய ஆபரேஷன்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி இருக்கிறார்.

இதய அறுவைச் சிகிச்சை

இதே போல சமீபத்தில் பிரதீப் என்ற ஆறு வயது சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாகத் தெரிவித்திருந்தார் லாரன்ஸ். அந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துள்ளது. இது லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் நடந்த 143-வது அறுவை சிகிச்சையாகும்.

நன்றி

நன்றி

இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், வசதியில்லாத குழந்தைகளுக்கு இதயக் கோளாறு இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என தனது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்துள்ளார்.

English summary
Actor Raghava Lawrence has been helping children to get free surgeries through his charitable trust for the children suffering from heart problems. Recently, Pradeep, a six-year-old boy's heart surgery has been successful.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil