»   »  ஜல்லிக்கட்டை அடுத்து நெடுவாசலுக்காக போராடும் ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டை அடுத்து நெடுவாசலுக்காக போராடும் ராகவா லாரன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் ராகவா லாரன்ஸ் நாளை உண்ணாவிரதம் இருக்க உள்ளார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இளைஞர்கள், மாணவ செல்வங்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமர்ந்து அமைதிப் புரட்சி நடத்தினார்கள். அதை நாடே வியந்து திரும்பிப் பார்த்தது.

அந்த புரட்சியில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது அடுத்த போராட்டத்திற்கு தயாராகிவிட்டார்.

நெடுவாசல்

நெடுவாசல்

நெடுவாசல் விவசாய கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இளைஞர்கள்

இளைஞர்கள்

சோறு போடும் விவசாயி வாடி நிற்பதை பார்த்த இளைர்கள் நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

ஜல்லிக்கட்டுக்காக மக்களோடு மக்களாக சேர்ந்து போராடிய நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட தயாராகிவிட்டார்.

உண்ணாவிரதம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக ராகவா லாரன்ஸ் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். இந்த போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. போராட்டம் நடத்த அனுமதி கிடைத்துவிட்டதாக லாரன்ஸ் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

English summary
Actor Raghava Lawrence is set to sit on a hunger strike in support of Neduvasal farmers on thursday. It is noted that earlier he protested with youths for Jallikattu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil