»   »  "சிஸ்டம் மாற கூப்புடுறோம்... போருக்கு வா தலைவா..!" ரஜினியை வரவேற்கும் செம்ம பாடல் இதோ!

"சிஸ்டம் மாற கூப்புடுறோம்... போருக்கு வா தலைவா..!" ரஜினியை வரவேற்கும் செம்ம பாடல் இதோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நாளை அந்த முக்கியமான தகவலை வெளியிடுவதை உறுதி செய்தார் ரஜினி

சென்னை : நடிகா் ரஜினிகாந்த் வெகுகாலமாக அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருந்தாலும் வெளிப்படையாக அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார்.

சமீபத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, 'போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' எனக் கூறியது அவரது அரசியல் பிரவேசத்துக்கான அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.

ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் வண்ணம் ராகவா லாரன்ஸ் "போருக்கு வா தலைவா" என்ற பாடலை உருவாக்கி இன்று வெளியிட்டிருக்கிறார்.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

நடிகா் ரஜினிகாந்தின் தீவிர ரசிகா்களுள் ஒருவா் ராகவலா லாரன்ஸ். இவா் கடந்த முறை ரஜினியின் பிறந்த நாளுக்கு புதிய பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தாா். இந்நிலையில், ரஜினியை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக "போருக்கு வா தலைவா" எனும் பாடலை சற்று முன்பு வெளியிட்டிருக்கிறார்.

ரஜினி ரசிகர்கள் சந்திப்பு

ரஜினி ரசிகர்கள் சந்திப்பு

கடந்த முறை நடைபெற்ற சந்திப்பின் போது போா் வரும் பொழுது பாா்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டுப் படப்பிப்பு பணிகளுக்காக சென்றுவிட்டாா். இந்நிலையில் தற்போது மீண்டும் ரசிகா்களுடனான சந்திப்பு கடந்த 5 நாட்களாக நடைபெற்று வருகிறது.

அரசியல்வாதிகள் கவனிப்பு

அரசியல்வாதிகள் கவனிப்பு

ரசிகரக்ளுடனான ரஜினியின் சந்திப்பு தமிழக அரசியல்வாதிகளால் ஒவ்வொரு நாளும் உற்று நோக்கப்படுகிறது. மேலும் அவர் டிசம்பர் 31-ம் தேதி (நாளை) அரசியல் பிரவேசம் தொடா்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாகத் தொிவித்திருந்தாா்.

ரஜினியை வரவேற்கும் பாடல்

அரசியலுக்கு ரஜினிகாந்தை வரவேற்கும் விதமாகவும், அவருக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும் நடிகா் ராகவா லாரன்ஸ் புதிய பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளாா். அந்தப் பாடலை சற்று முன்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் லாரன்ஸ்.

போருக்கு வா தலைவா

ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அந்தப் பாடலை ரஜினி ரசிகர்களுக்கு டெடிகேட் செய்துள்ளார். அந்தப் பாடலில் உணர்ச்சி மிகுந்த வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நீங்க அரசியலுக்கு வரணும்

நீங்க அரசியலுக்கு வரணும்

உனக்கு பொய் பேச தெரியாது; அரசியலுக்கு அது தேவை! எவ்வளவு உச்சத்துக்கு போனாலும் ஆணவம் இல்லாம இருப்ப; அரசியலுக்கு அது தேவை! உன்னால யாருமே கெட்டதில்ல; அப்படி நாங்க கேள்விபட்டதும் இல்ல! அரசியலுக்கு அது தேவை! கடவுள் மேல மிகப்பெரிய நம்பிக்கை வச்சிருக்க; மனசாட்சியோட வாழ்ற; அரசியலுக்கு அது தேவை!

தலைவா வா தலைவா!

தலைவா வா தலைவா!

பணம், பேர் புகழ் இனிமே உனக்கு அது தேவை இல்லை; அதுவும் அரசியலுக்கு தேவை! இது எல்லாத்துக்கும் மேல... தலைவன்ங்கிற வார்த்தைக்கு ஒரு முகம் தேவை; அது உன் முகம் தான் தலைவா! வா தலைவா..!

ஊர மாத்துவோம்

ஊர மாத்துவோம்

பாடல் வரிகள் கீழே

"போதும்... பட்டதெல்லாமே போதும்... மாத்துவோம்... யாரு என்ன சொன்னாலும்... ஊர மாத்துவோம்...
ஓட்டு போட்டவன முட்டாளுனு பார்க்குறாங்க... வா கேட்டிடலாம் வா தூக்கிடலாம்!

நீ வந்தா மாற்றம் தானே

நீ வந்தா மாற்றம் தானே

உன்ன போல ஒரு நல்லவரு தேவை இங்க... நீ வந்தா மாற்றம்தானே..!

தலைவா தலைவா தலைவா நீ போருக்கு வா..!

சிஸ்டம் மாற கூப்புடுறோம்

சிஸ்டம் மாற கூப்புடுறோம்

நல்ல நேரம் பொறக்கணும் இங்க.. சிஸ்டம் மாற கூப்புடுறோம்..

இஷ்டப்பட்டு நீங்களும் வந்தா... எப்போதுமே தோள் கொடுப்போம்!

தமிழ்நாடே தூள் பறக்கும்

தமிழ்நாடே தூள் பறக்கும்

விட்டகுறை தொட்டகுறை உனக்காக காத்திருக்கோம்

ஒரு வார்த்தை நீ சொல்லிப்புட்டா தமிழ்நாடே தூள் பறக்கும்!

களத்துக்கு வா தலைவா

களத்துக்கு வா தலைவா

உங்க கூட்டம் அன்புக் கூட்டம்... உடைஞ்சு உடைஞ்சு இருக்குதுங்க... கண்ண காமி புயல் வரும் இங்க... சாமி கூட அழைக்குதுங்க...

ரெண்டில் ஒண்ணு பார்த்திடலாம்... களத்துக்கு வா தலைவா!

கொண்டு வந்ததெதுவுமில்ல... கொண்டுபோக எதுவும் இல்ல...

தலைவா தலைவா தலைவா தலைவா... நீ போருக்கு வா..!" என நீள்கின்றன வரிகள்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

லாரன்ஸ் வெளியிட்ட இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கிளப்பியுள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் ரசிகர்களின் பாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Actor raghava lawrence released a song that welcomes Rajinikanth into politics. 'Porukku vaa thalaivaa' song is goes viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X