»   »  மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்! - சமாளிக்கும் ராகவா லாரன்ஸ்

மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம்! - சமாளிக்கும் ராகவா லாரன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மக்கள் சூப்பர் ஸ்டார் என்று எனக்குத் தெரியாமலேயே படத்தில் போட்டுவிட்டார்கள். எனக்கு அந்தப் பட்டம் வேண்டாம். என் அம்மா பேர் போதும் என்று கூறியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் லாரன்ஸ் பெயருக்கு முன்னால் மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயரைப் பயன்படுத்தியுள்ளனர்.

Raghava Lawrence statement on Makkal Superstar

இதைப் பார்த்த ரசிகர்கள், பொது மக்கள் மத்தியில் லாரன்ஸ் மீது வெறுப்பு கிளம்பிவிட்டது. சமூக வலைத் தளங்களில் அவரை கடுமையாக விமர்சித்து பதிவுகள் போட்டு வருகின்றனர். மீம்ஸ்களில் இதுவரை எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு லாரன்ஸை கலாய்த்து வருகின்றனர்.

இந்த எதிர்ப்பை லாரன்ஸ் கனவிலும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். எனவே உடனடியாக இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது. இயக்குநர்தான் அப்படிப் போட்டுவிட்டார் என்று கூறிச் சமாளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

எங்க அம்மா பேர்தான் எனக்கு எனக்கு மிகப் பெரிய பட்டம் கண்மணி ராகவா லாரன்ஸ்.

நேற்று வெளியான மொட்ட சிவா கெட்ட சிவா படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் சாய்ரமணி சமீப காலமாகவே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க போவதாக சொல்லி கொண்டிருந்தார். அது என்ன என்பது எனக்குத் தெரியாது.

ஆனால் இந்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் என் பெயருக்கு முன்னாள் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டதை வழங்கி இருக்கிறார். அதுதான் அந்த இன்ப அதிர்ச்சி. அவர் அன்பிற்கு நன்றி. இருந்தாலும் எனக்கு எந்த ஒரு பட்டமும் வேண்டாம். எப்போதும் இந்த உலகத்தில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார், அது என் தலைவர் ரஜினிகாந்த் மட்டும்தான். அவர்தான் என் குரு, எனக்கு வழிகாட்டி எல்லாமே. அவரால்தான் நான் இந்த சினிமா உலகுக்கே வந்தேன். அவர்தான் என்னை சினிமாவில் சேர்த்துவிட்டார்.

எனக்கு இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பட்டம் என் அம்மாவின் பெயர் தான். அதற்கு நிகராக வேறு எந்த பட்டமும் என்னை திருப்திப்படுத்திவிட முடியாது. அதனால் கண்மணி என்ற என் அம்மாவின் பெயரை எனக்கு பட்டமாக நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதனால் இனி என் பெயருக்கு முன்னாள் பட்டமாக கண்மணி ராகவா லாரன்ஸ் என்று வைத்துக்கொள்கிறேன்.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Raghava Lawrence says that here after he wouldn't use Makkal Superstar title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil