சந்திரமுகி 2 ல் 5 ஹீரோயின்களா? லாரன்சிற்கு அடிச்சது செம ஜாக்பாட்...அதிர்ஷ்டம்ன்னா இப்படி இருக்கனும்

சென்னை : டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி, பிறகு படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் திரையில் தோன்றிய ராகவா லாரன்ஸ், அதற்கு பிறகு ஹீரோவானார்.ஆரம்பத்தில் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை.

ஆனால் பேய் படங்களாக வரிசையாக இவர் நடித்த முனி, காஞ்சனா, காஞ்சனா 2 படங்கள் செம ஹிட் அடித்தன. ஆனால் தற்போது பேய் படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்து, ஆக்ஷன் பக்கம் போய் உள்ளார்.

தற்போது ருத்ரன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதில் பி.வாசு இயக்கும் சந்திரமுகி 2 படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதுவும் கிட்டதட்ட பேய் படம் தான். இதற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

சந்திரமுகி 2

சந்திரமுகி 2

ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடித்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பேய் படமான சந்திரமுகி செம ஹிட் ஆனதால் பல ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் துவங்கி நடந்து வருகிறது.

வடிவேலு கலாட்டா தாங்கல

வடிவேலு கலாட்டா தாங்கல

ஜுலை 15 ம் தேதி மைசூரில் சந்திரமுகி 2 ஷுட்டிங் துவங்கி நடந்து வருகிறது. ஷுட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்த காமெடி கலாட்டாக்களின் வீடியோ சமீபத்தில் வெளியாகி செம டிரெண்டானது. ரவி மரியா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

 என்னது 5 ஹீரோயின்களா

என்னது 5 ஹீரோயின்களா

சமீபத்தில் வெளியான தகவலின் படி நடிகை லட்சுமி மேனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின்படி சந்திரமுகி 2 படத்தில் 5 ஹாட் ஹீரோயின்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் லாரன்ஸ் 5 நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

யாருப்பா அந்த 5 பேர்

யாருப்பா அந்த 5 பேர்

லட்சுமி மேனன் மட்டுமில்லை, மகிமா நம்பியார், மஞ்சிமா மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன் என ஐந்து நாயகிகள் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் 5 பேரும் ஏற்கனவே ஷுட்டிங்கில் கலந்து கொண்டு, நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் சுபிக்ஷா கிருஷ்ணன் ஏற்கனவே படத்தின் பூஜையில் கலந்து கொண்டிருந்தார்.

 பேய் படமா? ரொமான்ஸ் படமா?

பேய் படமா? ரொமான்ஸ் படமா?

சந்திரமுகி 2 படத்தில் லாரன்சிற்கு 5 ஹீரோயின்கள் என்ற தகவல் பரவியதால் கோலிவுட்டில் பலரும் ஷாக்காகி உள்ளனர். இது பேய் படமா இல்லை ரொமான்ஸ் படமா என கேட்டு வருகின்றனர். இருந்தாலும் 5 ஹீரோயின்கள் என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் என பலரும் பொறாமையில் தங்களின் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X