இதுவே முதல் வெற்றி! சூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை.. ரஜினிக்கு கவிதை எழுதிய ராகவா லாரன்ஸ்!
சென்னை: தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் ரஜினிகாந்த், நேற்று அறிவித்து இருந்த நிலையில், ரஜினிகாந்தின் ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பாரதியார் கவிதையை பயன்படுத்தி புதிய கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
Recommended Video
நடன இயக்குநராக இருந்து நடிகரான ராகவா லாரன்ஸ், காஞ்சனா வரிசை படங்களின் மூலம் இயக்குநர் அவதாரத்தையும் எடுத்து வெற்றிகளை குவித்து வருகிறார்.

தற்போது, பாலிவுட்டில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில், காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்தையும் இயக்கி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், நேற்று ரஜினிகாந்த் முதல்வர் பதவி மீது தான் ஒருபோதும் ஆசைப்பட்டது இல்லை. ஆட்சி அதிகாரம் ஒருவர் இடத்திலும், கட்சி அதிகாரம் ஒருவரிடத்திலும் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

வெளி மாநிலத்தை சேர்ந்த ரஜினிகாந்த், தமிழர்களை ஆளக் கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ரஜினிகாந்த்தின் இந்த முடிவை சீமானும் வரவேற்று இருந்தார்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை என்ற தலைப்பில் ராகவா லாரன்ஸ் எழுதியுள்ள கவிதை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
"சூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை
சுவை புதிது!
பொருள் புதிது!
வளம் புதிது!
சொற் புதிது!
சோதி மிக்க நவக்கவிதை,
எந்நாளும் அழியாத மா கவிதை!
"கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது"
"என் பாட்டுக்கு ராஜா,
இது காட்டுக்கு ராஜா!"
இவை அன்று பாரதியார் சொன்னது!
இன்று நம் தலைவர் சொல்லும்
அரசியல் புதிது!
எண்ணங்கள் புதிது!
முதல்வர் பதவி வேண்டாம் என்கிற வழி புதிது!
இதை புரிந்து கொண்டால் நன்மை நமக்கு!
தலைவரை திட்டுபவர்கள் கூட,
தலைவரின் திட்டங்களையும்,
அவரது மனதையும் புரிந்து கொண்டு பாராட்டுகிறார்கள்!
இதுவே முதல் வெற்றி!
அப்படி தலைவரின் மனதை புரிந்து கொண்டு பாராட்டிய,
அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி!
நம் சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந் அவர்களின்
எண்ணங்கள் நிறைவேற,
நான் வணங்கும் ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்!
அன்புடன்
ராகவா லாரன்ஸ்"
என பதிவிட்டு, ரஜினி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறார் ராகவா லாரன்ஸ்.


Click it and Unblock the Notifications











