»   »  பேயாக மாறி 'முனி' ராகவா லாரன்ஸையே மிரட்டும் இறுதிச்சுற்று ரித்திகா சிங்

பேயாக மாறி 'முனி' ராகவா லாரன்ஸையே மிரட்டும் இறுதிச்சுற்று ரித்திகா சிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பி. வாசு இயக்கும் சிவலிங்கா படப்பிடிப்பு பெங்களூரில் துவங்கியது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

பி. வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம் சிவலிங்கா. சிவராஜ்குமார், வேதிகா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த இந்த பேய் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்த படம் தமிழில் சிவலிங்கா என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்படுகிறது.


படத்தை வாசுவே இயக்குகிறார். ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். பி. வாசுவின் மகன் சக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் துவங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் நடக்கிறது. இது குறித்து லாரன்ஸ் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,


நண்பர்களே, ரசிகர்களே, என்னுடைய அடுத்த படமான சிவலிங்காவின் படப்பிடிப்பு நாளை முதல் பெங்களூரில் துவங்குகிறது. அதனால் உங்கள் அனைவரின் ஆசியும் தேவை. என் குழந்தைகளை அடுத்த 25 நாட்களுக்கு பார்க்க முடியாது என்பதால் மாலைப் பொழுதை மெரினா கடற்கரையில் மிளகாய் பஜ்ஜியுடன் கழித்தேன் என்று தெரிவித்துள்ளார்.


English summary
Raghava Lawrence and Rithika Singh have started their upcoming project Shiva Linga being directed by P. Vasu. It is a remake of Kannada movie Shiva Linga.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos