»   »  ரகுவரனின் மகனை பார்த்திருக்கிறீர்களா?: வைரலாகும் புகைப்படம்

ரகுவரனின் மகனை பார்த்திருக்கிறீர்களா?: வைரலாகும் புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரகுவரன் மகனா இது, வளர்ந்துவிட்டாரே என்று வியக்கும் ரசிகர்கள்

சென்னை: மறைந்த நடிகர் ரகுவரனின் மகன் ரிஷிவரனின் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

மறைந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்து பின்னர் பிரிந்துவிட்டார். அவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். கல்லூரியில் படிக்கும் ரிஷியின் புகைப்படம் வெளிவந்தது இல்லை.

இந்நிலையில் ரிஷியின் புகைப்படம் வெளியாகி தீயாக பரவியுள்ளது.

நடிகர்

நடிகர்

எத்தனை நடிகர்கள் வந்தாலும் தமிழ் சினிமாவில் ரகுவரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் அதில் நிச்சயமாக ரகுவரன் கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

பாடல்

பாடல்

நடிகர் ரகுவரனை அனைவருக்கும் தெரியும். ஆனால் இசையில் ஆர்வம் உள்ள ரகுவரனை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ரோகினி ரகுவரனுக்காக ஒரு காரியத்தை செய்துள்ளார்.

ரிலீஸ்

ரிலீஸ்

ரகுவரன் எழுதி, பாடிய பாடல்களை ஒரு ஆல்பமாக தயாரித்தார் ரோகினி. அந்த ஆல்பத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின்போது ரிஷிவரனுடன் ரோகினியுடன் ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மகிழ்ச்சி

ரஜினிகாந்த் ரகுவரனின் இசை ஆல்பத்தை வெளியிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரோகினி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ரிஷியை பார்த்த ரசிகர்கள் ரகுவரன் மகனா இது, வளர்ந்துவிட்டாரே என்று வியக்கிறார்கள்.

English summary
Picture of actor Raghuvaran's son Sai Rishivaran has gone viral on social media. Rajinikanth has launched an album titled Raghuvaran a musical journey.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil