»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகர் ரகுவரன் நிமோனியா காய்ச்சல் காரணமாக சென்னை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கதாநாயகனகா ஏழாவது மனிதன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் ரகுவரன். அதன் பிறகு படவாய்ப்புகள் குறையவே, வில்லனாக அவதாரம் எடுத்தார். வில்லன் நடிப்பில் தனி பாணியைஉருவாக்கி, தென்னிந்தியாவின் அல் பசினோ என்ற பெயரையும் பெற்றார்.

பின்னர் குணச்சித்திர பாத்திரங்களுக்குத் தாவினார். தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களுள்ஒருவராக விளங்கி வருகிறார். நடிகை ரோகினியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டரகுவரன், சமீப காலமாக பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார்.

மனைவி ரோகினி தன்னை விட்டுப் பிரிந்ததால் பெரும் அதிர்ச்சியடைந்த ரகுவரன், சில காலமாகநிறுத்தியிருந்த மதுவுக்கு மீண்டும் அடிமையாகியுள்ளார். இதனால் அடிக்கடி உடல் நலம்பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சென்னை சேத்துப்பட்டுபகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குநிமோனியா காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil