»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கெளவர பேராசியர் பதவி வழங்கியுள்ளது கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்றரவீந்திர பாரதி பல்கலைக்கழகம்.

பல்கலைக்கழகத்தின் இசைப் பிரிவு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டியது ரஹ்மானின் வேலை. ஆனால்,தனக்கு நேரம் கிடைப்பதே அரிது என்பதால் இந்தப் பொறுப்பை ஏற்பதா, இல்லை கைவிரிப்பதா என்று குழம்பிப்போயுள்ளார் ரஹ்மான்.

மிகவும் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகத்தின் அழைப்பு என்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் நோ சொல்லரஹ்மானுக்கு மனமில்லையாம்.

இவரைப் போலவே இந்தப் பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டுள்ள இன்னொரு நபர் பாடகர் சங்கர்மகாதேவன்.

அபூர்வ சந்திப்பு:

சமீபத்தில் சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்த சந்திப்பு இது. கலை நாயகனின் புதிய காதலி கெளதமநடிகையும், பழைய மனைவி சரிகமவும் சந்தித்துக் கொண்டார்களாம்.

இருவரும் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், மிக அமைதியாக பேசிவிட்டுக் கலைந்தார்கள்என்கிறார்கள். கலைநாயகன் சார்பில சரிகம நடிகையிடம் செட்டில்மென்ட் குறித்து கவுதம நடிகைபேசியிருக்கலாம் என கோலிவுட் குருவிகள் சொல்கின்றன.

அதே நேரத்தில் மீண்டும் நடிப்பேன் என்று கிளம்பிய சரிகம நடிகைக்கு இந்தியில் கண்டுகொள்ள ஆளே இல்லை.இதனால் தெலுங்குப் படங்களில் கூட்டத்தோடு கோவிந்தா கேரக்டர்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil