»   »  கலாமின் பாடலுக்கு ரஹ்மான் இசை

கலாமின் பாடலுக்கு ரஹ்மான் இசை

Subscribe to Oneindia Tamil

குடியரசுத் தினத்தன்று டெல்லியில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பாடல் பாடப்படுகிறது.

டெல்லியில் உள்ள இந்திய கிரிக்கெட் கிளப் அரங்கில் இந்த சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.குழந்தைகள் நல நிதிக்காக மும்பையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் என்ற தொண்டு நிறுவனமும்,டாடா நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அப்துல் கலாம் எழுதிய ஒரு பார்வை ஒரு உலகம் என்ற ஆங்கில உரைநடைப்பகுதியை இந்தி நடிகர் அமிதாப்பச்சன் வாசிக்கிறார்.

இதனையடுத்து இந்த உரைநடைப் பகுதி, பாடல் வரிகளாகமாற்றப்பட்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மேடையில் பாடப்படுகிறது. இந்தியிலும் இந்தப் பாடல் பாடப்படும்.

இது தொடர்பாக மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த ரஹ்மான், கடந்த ஆண்டு கலாமிடம் இருந்து எனக்குதொலைபேசி அழைப்பு வந்தது.

அப்போது அவருடைய இந்த உரைநடைப் பகுதிக்கு இசை வடிவம் கொடுக்கமுடியுமா? என்று கேட்டார்.

அந்த உரை நடை, பாடலுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது.

இதையடுத்து அதைப் பாடலாக்கி, குடியரசுத்தலைவர் மாளிகையிலேயே பாடிக் காட்டினோம்.

அதை கலாம் மிகவும் விரும்பி ரசித்தார்.

டெல்லியில் ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடல்களைப்பாடுகின்றனர், இசைக் கருவிகளையும் மீட்டுகின்றனர்.

கலாமின் பாடலோடு, மா துஜே சலாம், குரூஸ் ஆப் பீஸ், சோட்டி சி ஆஷா போன்ற பாடல்களும் பாடப்படும்.

தனுஸ்ரீயின் நடனமும் இடம்பெறும் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil