»   »  ஏ ஆர். ரஹ்மான் முதல் முறையாக தயாரிப்பாளராகும் '99 சாங்ஸ்'!

ஏ ஆர். ரஹ்மான் முதல் முறையாக தயாரிப்பாளராகும் '99 சாங்ஸ்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

99 சாங்ஸ் படத்தின் மூலம் முதல் முறையாக தயாரிப்பாளர் ஆகிறார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.

ரோஜா' படம் மூலம் திரை உலகில் பிரபலமடைந்து, இன்று உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவராகத் திகழ்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்துக்காக ஒரிஜினல் இசை, ஒரிஜினல் பாடலுக்காக இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்று தமிழனுக்கு பெரும் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் ரஹ்மான்.

விருதுகள் குவித்தவர்

விருதுகள் குவித்தவர்

இவை தவிர, இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி' விருதினை இருமுறையும், ‘பாஃப்டா' மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக் கல்வி மையமான 'ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து' வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ள 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மான் சினிமா தயாரிப்பிலும் இறங்கப் போவதாக கூறி வந்தனர்.

சொந்தப் படம்

சொந்தப் படம்

இந்நிலையில், விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் இயக்கத்தில் ‘99 சாங்ஸ்' ('99 songs') என்ற படத்தை அவர் விரைவில் தயாரிக்கவுள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுமுகங்கள்

புதுமுகங்கள்

ஹிமான் பட் மற்றும் டென்சிங் டாலா ஆகிய புதுமுகங்கள் அறிமுகமாகும் இப்படத்துக்கான ஆயத்த ஏற்பாடுகள் சென்னையில் நடந்து வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழிலும்

தமிழிலும்

இந்தப் படம் இந்தியில் மட்டுமல்லாது, தமிழிலும் வெளியாகவிருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான்தான் இசையமைக்கவிருக்கிறார்.

English summary
AR Rahman is turning as film producer through Hindi - Tamil bi lingual 99 Songs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil