twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் வெற்றிக் கூட்டணிகள்!

    By Shankar
    |

    தமிழ் சினிமா என்றில்லை... உலக அளவில் சினிமாக்களைக் கவனித்தால் ஒன்று புரியும்... குறிப்பிட்ட இயக்குநர் - தயாரிப்பாளர் - இசையமைப்பாளர் - ஹீரோக்கள் தொடர்ந்து கூட்டணி அமைப்பார்கள்.

    இந்தக் கூட்டணி வெற்றிக்காக மட்டுமல்ல, வசதிக்காகவும் நல்ல புரிதல் இருப்பதாலும்தான்.

    இந்த வசதியும் புரிதலும் எப்போது இல்லாமல் போகிறதோ... அப்போது கூட்டணியும் பிய்த்துக் கொள்ளும்.

    ஆனால் இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் கூட்டணி அமைத்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொடர்ந்து அவருடனே பணியாற்ற விரும்புகிறார்கள். அவர் அதிக சம்பளம் கேட்டாலும் தரத் தயாராகவே உள்ளனர். காரணம் நல்ல புரிதல்...

    ரஹ்மானுடன் அப்படி வெற்றிக் கூட்டணி அமைத்த சில தமிழ் இயக்குநர்கள், ஹீரோக்கள்...

    மணிரத்னம்

    மணிரத்னம்

    ஏ ஆர் ரஹ்மான் என எழுதினால் தன்னிச்சையாக அடுத்து வரும் பெயர் இயக்குநர் மணிரத்னம். அவர்தான் ரஹ்மானை அறிமுகப்படுத்தியவரும் கூட. ரோஜாவில் தொடங்கிய இவர்களின் இசைப்பயணம், கடல் தாண்டியும் தொடர்கிறது. மணிரத்னம் படங்கள் தோற்றாலும் கூட, ரஹ்மானின் இசை மனதில் நிலைக்கும் தன்மை கொண்டது. அதற்கு உதாரணம் கடல்!

    ஷங்கர்

    ஷங்கர்

    ஷங்கரின் இணைபிரியா இசைத் தோழர் ரஹ்மான் என்றால் மிகையல்ல. இருவருக்கும் அந்த அளவு புரிதல் உண்டு. இடையில் அந்நியன், நண்பன் என இரு படங்களுக்கு மட்டும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். ஆனால் அதுகூட ரஹ்மானே விரும்பி சம்மதித்ததால் ஹாரிஸை இசையமைக்கச் சொன்னாராம் ஷங்கர். ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், பாய்ஸ், சிவாஜி, எந்திரன் என ரஹ்மான் - ஷங்கர் காம்பினேஷன் அனைத்துமே பம்பர் ஹிட்தான்!

    பாரதிராஜா

    பாரதிராஜா

    இளையராஜாவைப் பிரிந்த பிறகு சரியான இசையமைப்பாளர் அமையாமல் சிரமப்பட்ட பாரதிராஜா, ரஹ்மானுடன் கிழக்குச் சீமையிலே படத்தில் கை கோர்த்தார். தொடர்ந்து கருத்தம்மா, அந்தி மந்தாரை, தாஜ்மகால், கண்களால் கைது செய் போன்ற படங்களில் இருவரும் பணியாற்றினர்.

    சூப்பர் ஸ்டார் ரஜினி

    சூப்பர் ஸ்டார் ரஜினி

    முத்து படத்திலிருந்து ரஜினி - ரஹ்மான் இணை தொடர்கிறது. தொடர்ந்து படையப்பாவில் பட்டையைக் கிளப்பினார்கள். சிவாஜி, எந்திரன் பாடல்கள் விற்பனையில் சாதனைப் படைத்தன. இப்போது கோச்சடையான், ராணா என இரு பெரிய படங்களுக்கும் ரஹ்மான்தான் இசை.

    கமல்ஹாஸன்

    கமல்ஹாஸன்

    கமல் - ரஹ்மான் இருவரும் இரு படங்களில் மட்டுமே பணியாற்றினர். இந்தியனில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். ஆனால் தெனாலியில் அந்த அளவு இல்லை. இன்னொன்று கமலும் பெரிதாக ரஹ்மானிடம் ஆர்வம் காட்டவில்லை.

    கேஎஸ் ரவிக்குமார், எஸ்ஜே சூர்யா, கதிர், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோருடன் ரஹ்மான் தலா இரண்டு படங்கள் செய்துள்ளார். அவற்றில் சில ஹிட். மற்றவை படங்கள் சொதப்பியிருக்கும், பாடல்கள் டாப்பாக இருக்கும் ரகம்.

    இந்தியில்...

    இந்தியில்...

    இந்தியில் ஆமீர்கான், ஷாரூக்கான் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். குறிப்பாக ஆமீர்கானும் ரஹ்மானும் இணைந்த படங்கள் லகான், ரங் தே பசந்தி, கஜினி படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

    English summary
    Here are some successful combination of Tamil directors with A R Rahman.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X