»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் வரும் 27ம் தேதி நடத்தவுள்ள இசைக் கச்சேரிக்கான இடம்மாற்றப்பட்டுள்ளது.

மறைந்த இசையமைப்பாளரான "நம்மவர்" புகழ் மகேஷ் மகாதேவனின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளஅறக்கட்டளைக்கு நிதி சேர்ப்பதற்காக ரஹ்மானின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

வரும் 27ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ப் மைதானத்தில்இந்நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. நடிகர் கமல்ஹாசனின் முயற்சியால் இந்த நிகழ்ச்சிநடக்கவுள்ளது.

ஆனால் இந்த கோல்ப் மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடப்பதை எதிர்த்து மெட்ராஸ் ஜிம்கானா கிளப் சார்பில்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கச்சேரிக்கு ஏராளமான பேர் வருவார்கள். அப்படி வரும்போது கோல்ப் மைதானத்தின் புல்வெளிகள்பாழ்பட்டுவிடும். பல லட்சம் ரூபாய் செலவு செய்து இந்த கோல்ப் மைதானம் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டுவருகிறது. மேலும் இந்த இசை நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு மைதானத்தில் உள்ள வசதிகள் போதாதுஎன்று அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி குலசேகரன் இது தொடர்பாக மகேஷ் மகாதேவன் அறக்கட்டளை நிர்வாகிகளானகமல் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்நிலையில், மகேஷ் அறக்கட்டளை சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவில், ரஹ்மானின்இசைக் கச்சேரி நடக்கும் இடத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் கோல்ப் மைதானத்திலிருந்து தரமணியில் உள்ளசென்டிரல் பாலிடெக்னிக் மைதானத்திற்கு மாற்றிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு தொழில் கல்வித் துறை இயக்குநரின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி குலசேகரன், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் தாக்கல் செய்யப்பட்டமனுவைத் தள்ளுபடி செய்தார்.

  • ரஹ்மான் கச்சேரிக்கு தடை கோரி வழக்கு

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil