கட்டிக்கப்போற பொண்ணை இப்படியா பலவந்தப்படுத்தி லிப் லாக் அடிப்பீங்க.. RRR நடிகரை விளாசும் ரசிகர்கள்!

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா லிப் லாக் புகைப்படத்துடன் தனது திருமண அறிவிப்பை அறிவித்துள்ளார்.

ஆனால், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு பதிலாக ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அதற்கு காரணம் அவர் வெளியிட்டுள்ள அந்த அவசரகதி லிப்லாக் புகைப்படம் தான்.

ராகுல் ராமகிருஷ்ணா

ராகுல் ராமகிருஷ்ணா

சைன்மா எனும் குறும்படத்தில் நடித்த ராகுல் ராமகிருஷ்ணாவுக்கு ஜயம்மு நிச்சயமமு ரா எனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவின் நண்பனாக நடித்து அசத்தினார். மகேஷ் பாபுவின் பரத் எனும் நான், விஜய் தேவரகொண்டாவுடன் மீண்டும் கீதா கோவிந்தம், அல்லு அர்ஜுன் உடன் அலா வைகுந்தபுரமுலோ மற்றும் ஜதிரத்னலு என பல படங்களில் காமெடியனாகவும் நண்பனாகவும் நடித்து அசத்தி உள்ளார் ராகுல் ராமகிருஷ்ணா.

ஆர்ஆர்ஆர் படத்தில்

ஆர்ஆர்ஆர் படத்தில்

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் லச்சு எனும் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர்-ன் கூட்டாளியாக மல்லி எனும் சிறுமியை காப்பாற்றும் வீரனாக நடித்திருப்பார். ராம்சரண் இவரை பிடித்து கட்டி வைத்து அடித்து நொறுக்கும் போது அவர் மீது பாம்பை கடிக்க விடும் காட்சியில் மிரட்டி இருப்பார்.

கல்யாணம் ஆகப் போகுது

கல்யாணம் ஆகப் போகுது

ஐடி துறையில் வேலை பார்த்து வரும் பிந்து என்பவருடன் விரைவில் ராகுல் ராமகிருஷ்ணாவுக்கு திருமணம் ஆகப் போகிறது. அந்த அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு லிப்லாக் புகைப்படத்துடன் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ராகுல் ராமகிருஷ்ணா. ஆனால், அதுவே அவருக்கு பிரச்சனையாகவும் மாறி விட்டது.

கட்டாய லிப்லாக்

கட்டாய லிப்லாக்

பார்ட்டி ஒன்றில் தான் முதன் முதலில் பிந்துவை இவர் சந்தித்துள்ளார். பார்ட்டியில் இருந்து கிளம்பும் போது இவரது வண்டி பிரச்சனை பண்ண அவருக்கு பிந்து லிப்ட் கொடுக்க இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டது. ஏற்கனவே இவர் அளித்துள்ள பேட்டியில் பிந்து ரொம்பவே பிரைவேட் ஆன பொண்ணு எனக் கூறியுள்ள நிலையில், அவர் தடுத்தும் பலவந்தமாக லிப் லாக் அடித்து அந்த புகைப்படத்தை நண்பர்களை வைத்து எடுக்க வைத்து ராகுல் ராமகிருஷ்ணா வெளியிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துவதற்கு பதிலாக விளாசி வருகின்றனர்.

இப்படி போடாதீங்க

இப்படி போடாதீங்க

தென்னிந்திய ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்வதை விட அதிகமாக அட்வைஸ் மற்றும் ட்ரோல் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். அந்த பெண்ணுக்கான பிரைவசியை கொடுங்க என்றும் இப்படி பப்ளிக்கா அவங்கள கட்டாயப்படுத்தி எடுத்த லிப் லாக் போட்டோவை போடாதீங்க, சீக்கிரம் டெலிட் பண்ணுங்க என்றும் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X