»   »  6 கோடி வைரத்தை காதலி அசினுக்கு அன்புப் பரிசாக வழங்கிய ராகுல் சர்மா

6 கோடி வைரத்தை காதலி அசினுக்கு அன்புப் பரிசாக வழங்கிய ராகுல் சர்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை அசினுக்கு அவரது காதலர் ராகுல் சர்மா சுமார் 6 கோடி மதிப்பிலான வைர மோதிரம் ஒன்றைப் பரிசளித்து இருக்கிறார்.

20 காரட் சாலிடர் வைரமோதிரமான அந்த மோதிரம் ஸ்பெஷலாக பெல்ஜியத்திலிருந்து வரவழைக்கப் பட்டதாம். இதில் AR என அசின் மற்றும் ராகுலின் முதல் எழுத்து மோனோக்ராம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அசின், ராகுல் இருவரின் நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறாத நிலையில், இம்மோதிர செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அசின்

அசின்

தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டிய நடிகை அசின், மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல் சர்மாவை விரைவில் மணம் புரியவிருக்கிறார்.

6 கோடி மதிப்பிலான

6 கோடி மதிப்பிலான

மைக்ரோமேக்ஸ் நிறுவனரான ராகுல்ஷர்மா காதல் பரிசாக வைர மோதிரம் ஒன்றைப் அசினுக்கு பரிசாக அளித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 20 காரட் சாலிடர் வைரமோதிரமான அந்த மோதிரம் ஸ்பெஷலாக பெல்ஜியத்திலிருந்து வரவழைக்கப் பட்டதாம். இதில் AR என அசின் மற்றும் ராகுலின் முதல் எழுத்து மோனோக்ராம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அசின், ராகுல் இருவரின் நிச்சயதார்த்தம் இன்னும் நடைபெறாத நிலையில், இம்மோதிர செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மண்டியிட்டு

மண்டியிட்டு

அசினின் முன்பு மண்டியிட்டு மேற்கத்திய பாணியில் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் ராகுல் சர்மா. ராகுல் சர்மாவின் காதலை அசின் ஏற்றுக் கொண்டதும் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளிக்க விரும்பிய ராகுல் சர்மா அதற்காக விலையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இந்த வைர மோதிரத்தை அவருக்கு பரிசாக அளித்திருக்கிறார்.

காதல் பரிசாக

காதல் பரிசாக

காதலிக்கத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் ராகுல் சர்மா அளித்த இந்தப் பரிசு தற்போது அசினின் கைகளில் இந்த வைர மோதிரம் மின்னிக் கொண்டிருக்கிறது.

இரு வீட்டார் சம்மதத்துடன்

இரு வீட்டார் சம்மதத்துடன்

அசின் தொழில்ரீதியாக ஒப்புக்கொண்ட பணிகள் அனைத்தும் முடிந்தவுடன், இரு வீட்டாரும் முறைப்படி திருமணத் தேதியை முடிவு செய்யவிருக்கின்றனர். கூடிய விரைவிலேயே இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அசினின் அன்பிற்கு முன்னால் இந்த வைர மோதிரம் எல்லாம் ஒரு விலையா? என்று ராகுல் சர்மா நினைத்திருக்கலாம்.

English summary
Asin and Rahul Sharma‘s engagement, more of a proposal than an engagement actually. Rahul made a grand proposal to his lady by getting down on his knees with a 20 carat solitaire (specially imported from Belgium). the ring is currently valued at Rs 6 crore. It has a monogram of the couple ‘AR’ (A for Asin and R for Rahul) under the diamond and the band of the ring, which is also made of diamonds.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil