»   »  ஜிங்கு.. ஜிங்குன்னு... ஆட வரும் சவுகார்ப்பேட்டை "பேய்"!

ஜிங்கு.. ஜிங்குன்னு... ஆட வரும் சவுகார்ப்பேட்டை "பேய்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பேய்க் கதைகளின் பாய்ச்சல் சற்றும் குறையவில்லை.. பேய்ப் பாச்சலாக போய்க் கொண்டே இருக்கிறது.. இப்படியா போயிட்டிருந்தா எப்படி.. ஒரு முடிவே கிடையாதா என்று பேய்களுக்கே டென்ஷன் வரும் அளவுக்கு பேய்க் கதைகள் ஜாஸ்தியாகத்தான் வந்து கொண்டிருக்கின்றன.

காஞ்சனா பேய் இப்போதுதான் ஒரு காட்டு காட்டு விட்டுச் சென்றுள்ளது. இந்த நிலையில் அடுத்து பயமுறுத்து வருகிறது சவுகார்ப்பேட்டை பேய்.. !

ராய்லட்சுமிதான் இந்தப் படத்தில் பேயாட்டம் போடுகிறார். இவர் ஏற்கனவே முனி 2 படத்தில் பேயாட்டத்தை நேரில் பார்த்த முன் அனுபவம் மிக்கவர் என்பதால் சவுகார்பேட்டையில் பேய் வேடத்தில் பின்னி எடுத்திருக்கிறாராம் (பேய்க்கும் இவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி போல)..

மொசக்குட்டி குரூப்

மொசக்குட்டி குரூப்

மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம்தான் இந்த சவுகார்பேட்டை. ஸ்ரீகாந்த் நாயகநாக நடிக்கிறார்.

ராய் லட்சுமி

ராய் லட்சுமி

ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக லஷ்மிராய் நடிக்கிறார். மற்றும் சரவணன், விவேக், அப்புக்குட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், பவர் ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன், தலைவாசல் விஜய் ரேகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

வடிவுடையான் டைரக்ஷன்

வடிவுடையான் டைரக்ஷன்

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான். படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்... நிறையவே சொன்னார்....

டபுள் ரோலில் ஸ்ரீகாந்த்

டபுள் ரோலில் ஸ்ரீகாந்த்

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் இரண்டு வேடமேற்கிறார். அதில் ஒரு கதாபாத்திரம் மந்திரவாதி ஆகும். ராய் லட்சுமி எவ்வளவோ படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இதில் வித்தியாசமாக நடித்துள்ளார்.

மாயப்பேய்

மாயப்பேய்

முதன் முறையாக ராய் லட்சுமி மாயா என்ற பேய் வேடத்தில் நடிக்கிறார். பேய் பிடித்து தானும் ஆடி மற்றவர்களையும் ஆட்டிப் படைக்கும் திகிலான கதாப்பாத்திரம் ஏற்கிறார். படத்தின் படப்பிடிப்பு தாம்பரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் வடிவுடையான்.

வரட்டும் வரட்டும்!

English summary
Rai Lakshmi is all set to panic the fans as a ghost in her new movie Sowkarpettai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil