»   »  'லட்சுமியின் என்டிஆர்' படத்தில் லட்சுமியும் நடிக்கிறாங்களாமே.. அட இது வேற லக்ஷமிங்க!

'லட்சுமியின் என்டிஆர்' படத்தில் லட்சுமியும் நடிக்கிறாங்களாமே.. அட இது வேற லக்ஷமிங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை ராம் கோபால் வர்மா, கேதி ரெட்டி ஜெகதீஸ்வர் ஆகிய இருவரும் படமாக்கி வருகிறார்கள். ராம் கோபால் வர்மா பார்வதியின் என்.டி.ஆர் என்ற பெயரில் படம் எடுக்கிறார்.

கேதி ரெட்டி ஜெகதீஸ்வர், லெட்சுமியின் வீர்கிராந்தம் என்ற பெயரில் படம் எடுக்கிறார். இதில் ஜெகதீஸ்வர் இயக்கும் படத்தில், லட்சுமி பார்வதியாக 'ஜூலி 2' படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ராய் லக்ஷ்மி நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது.

Rai laxmi in lakshmi's NTR?

ஆனால் இதை மறுப்பது போன்று ஆச்சர்யத்துடன் கூடிய எமோஜியை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ராய் லக்‌ஷ்மி. இதன் மூலம் அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை எனத் தெரிகிறது.

ராய் லக்‌ஷியின் ரசிகர்கள் பலர், 'அந்த வேடத்தில் உங்களை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை' என ரிப்ளை செய்திருக்கிறார்கள். 'ஜூலி 2' படத்தில் கவர்ச்சியில் இறங்கி அடித்திருக்கும் ஜூலி எப்போது வேண்டுமானாலும் சர்ச்சை வெடிக்கக் காத்திருக்கும் என்.டி.ஆர் படத்தில் நடிப்பது குறித்து யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

English summary
It was reported that Raai Laxmi would act as Lakshmi in the film 'Lakshmi's NTR'. Raai Laxmi has mentioned Emoji in his Twitter page, as it is a exclamation emoticon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X