»   »  அயய்யோ மழையா... அடைமழையா... ‘தமன்னா’ பாட்டைப் பார்த்து தெறித்து ஓடும் மக்கள்!

அயய்யோ மழையா... அடைமழையா... ‘தமன்னா’ பாட்டைப் பார்த்து தெறித்து ஓடும் மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை என்றாலே கிலியை கிளப்பும் அளவிற்கு சென்னையில் ஒரு காட்டு காட்டி விட்டுச் சென்றுள்ளது மழை. வாரான் வாரான் பூச்சாண்டி என வானிலை ஆய்வு மையமும் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என தன் பங்கிற்கு பீதி கிளப்பி வருகிறது.

பையா படத்தில் தமன்னா மழையில் நனைந்தபடி ஆடிய ‘அடடா மழைடா... அடை மழைடா...' என்ற பாடலைப் பார்த்தாலே காய்ச்சல் வருகிறதாம் சிலருக்கு. அந்தளவிற்கு மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மழைக்காலம்.. இந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் வந்த சில பல மழைக் காட்சிகளைப் பற்றி நினைவு கூறாவிட்டால் "சாமிக் குத்தமாகி" விடும்.. எனவே மழையை வைத்து இடம்பெற்ற சில பாடல்களின் தொகுப்பு இதோ...

பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்...

கனமழை என்றதுமே நம்மில் பெரும்பாலானோருக்கு நினைவில் வருவது, ‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்' என்ற பாடல் தான். பாயும் புலி படத்தில் வரும் இந்தப் பாடல் காட்சியில் ரஜினியும், ராதாவும் நடித்திருப்பர்... இன்று வரை பலரும் ரசித்து மகிழும் பாட்டு இது. இசை - இளையராஜாவாச்சே!

ஓஹோ மேகம் வந்ததோ...

இதேபோல், மௌனராகம் படத்தில் இடம் பெற்ற, ‘ஓகோ மேகம் வந்ததோ..' பாடல் போல் மழையில் நனைந்தபடியே ஆட்டம் போட வேண்டும் என்ற ஆசை எல்லோர் மனதிற்குள்ளுமே உண்டு. ரேவதி போன்றே பலரும் இந்தப் பாடலைக் கேட்கும்போது மாறி விடுவர்!

மழை வருது...

‘மழை வருது... மழை வருது.. குடை கொண்டுவா' என்ற பிரபு, கௌதமி நடித்த இந்தப்பாடல் ஏதோ நமக்கு அறிவுரை கூறுவது போலவே அமைந்திருப்பது மறுக்க முடியாத உண்மை. இது குளிர்மழையைப் போல இதமான பாடல்.

நான் சொன்னதும் மழை வந்துச்சா...

தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்திலும் மழை குறித்த ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. அதில், ‘நான் சொன்னதும் மழை வந்துச்சா... நான் சொன்னதும் வெயில் வந்துச்சா...' என வரிகள் வரும். ஆனால், நாம் கதறியும் கடந்தவாரம் மழை நிற்கவில்லையே... வெயிலும் வரலையேய்யா!

விண்ணோடு மேளச்சத்தம் என்ன?

மழையை ஒரு பாடலுக்கு மட்டுமே பயன்படுத்தாலும், படத்தின் தலைப்பாகவே வைத்துக் கொண்டாடிய படம் மழை. ஜெயம் ரவி, ஸ்ரேயா நடித்திருந்த இந்தப் படத்தில் மழையைக் கண்டதும் நாயகி ஆடிப் பாடத் தொடங்கி விடுவார்... ஆனா நாம்தான் ஆடிப் பாட முடியாமல் அகதிகள் போல ஏரியாவை விட்டுக் காலி செய்து ஓட வேண்டிய நிலையில் இருக்கிறோம்!

நீ என் முதல்மழை...

உள்ளம் கேட்குமே படத்திலும், ‘மழை மழை... என் உலகத்தில் வருகின்ற முதல் மழை... நீ முதல் மழை' என நாயகியை வர்ணித்து பாடியிருப்பார் ஹீரோ. அவருக்கென பாடி விட்டார்.. அகப்பட்டது நாம் அல்லவா.. !

English summary
The round up of rain related songs in Tamil cinema, which will be very suitabele for this rainy days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil