இந்த 10 விஷயம் இருந்தால் நீங்களும் ரைசாவை கல்யாணம் பண்ணிக்கலாம்.. அவரும் அவைலபிள் தானாம்!

சென்னை: 5 வருடத்திற்கு முன்பாகவே தனக்கு லவ் பிரேக்கப் ஆகிவிட்டது என்பதை போட்டு உடைத்துள்ளார் நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான ரைசா வில்சன்.

மேலும், ரைசாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அந்த நபருக்கு இந்த 10 குணங்கள் இருக்க வேண்டும் என ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளார்.

சமீபத்தில் ரசிகர்களுடன் நடத்திய கேள்வி பதில் பகுதியில் ரைசா வில்சன் தன்னுடைய பர்சனல் விஷயங்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.

ரசிகர்களுடன் தொடர்பில்

ரசிகர்களுடன் தொடர்பில்

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார் நடிகை ரைசா வில்சன். பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட இவருக்கு அந்த நிகழ்ச்சி முடிந்ததும் பல பட வாய்ப்புகள் குவிந்தன.

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடி

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடி

பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த ஹரிஷ் கல்யாணுக்கும் ரைசா வில்சனுக்கும் பிக் பாஸ் வீட்டில் நல்ல கெமிஸ்ட்ரி உருவானது. நிகழ்ச்சி முடிந்த உடனே யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர்.

லவ் பிரேக்கப்

லவ் பிரேக்கப்

இந்நிலையில், ரசிகர்களுடன் சமீபத்தில் ரைசா வில்சன் நடத்திய கேள்வி பதில் பகுதியில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டதா? என்கிற கேள்வியை எழுப்ப ஆம், 5 ஆண்டுகளுக்கு முன்னதாக நான் ஒருவரை காதலித்து வந்தேன். ஆனால், அந்த காதல் கைகூடவில்லை எனக் கூறியுள்ளார்.

Recommended Video

மரங்களுக்கு நடுவே நடனமாடிய நடிகை Deepika Singh கழுவி ஊற்றிய Netizens
காதலிக்க காத்திருக்கிறேன்

காதலிக்க காத்திருக்கிறேன்

மேலும், புதிய உறவில் இணைய ஆவலுடன் தான் இருப்பதாகவும், நல்ல பையன் கிடைத்தால் காதலிக்கவும் தயார் எனவும் நடிகை ரைசா வில்சன் ரசிகரின் கேள்விக்கு சுவாரஸ்யமாக பதில் அளிக்க, ரைசா வில்சனின் ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் அந்த கேள்வி பதில் செஷனில் கலந்து கொண்டனர்.

என்ன தகுதி வேண்டும்

என்ன தகுதி வேண்டும்

ரைசா வில்சனை இப்படி பேசியே மடக்கி விடலாம் என நினைத்த சில ரசிகர்கள் உங்களை கரெக்ட் பண்ணனும்னா என்ன தகுதி வேண்டும் என்கிற கேள்வியை எழுப்ப, அவரும் படு கூலாக ஒரு 10 நல்ல குணங்கள் இருக்க வேண்டும் என ராமன் தேடிய சீதை படத்தின் எம்ஜிஆர் போல லிஸ்ட்டை அடுக்கி உள்ளார்.

10 கட்டளைகள்

10 கட்டளைகள்

புத்திசாலித்தனம், கருணை, கனிவு, வேடிக்கையாக இருப்பது, மதிப்பளித்து நடப்பது, கடின உழைப்பாளி, பொறுப்பான புருஷன், நேர்மை, புரிந்து நடந்து கொள்ள வேண்டும் மற்றும் உண்மையானவராக இருக்க வேண்டும் என தனது 10 கட்டளைகளை கூறியுள்ளார் ரைசா வில்சன்.

நெட்டிசன்கள் ட்ரோல்

நெட்டிசன்கள் ட்ரோல்

இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் பிரேக்கப் ஆகி 5 வருஷம் கழிச்சும் இன்னும் ஒரு பாய் பிரண்ட் கூட கிடைக்காம இருக்கிறான் என ரைசா வில்சனின் 10 கட்டளைகளை கேட்ட இளைஞர்கள் சமூக வலைதளங்களில் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X