Porn vs Prostitution: ஷில்பா ஷெட்டி கணவர் எப்படி எல்லாம் ட்வீட் போட்டு மாட்டியிருக்காரு பாருங்க!

மும்பை: ஆபாச பட தயாரிப்பு வழக்கில் கைதாகி இருக்கும் ராஜ் குந்த்ராவின் மொத்த ஜாதகத்தையும் அலசி ஆராய்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அவர் பதிவிட்ட பழைய ட்வீட்களை நோண்டி நொங்கெடுத்து வருகின்றனர்.

நியூட்டன் ட்வீட்டை தொடர்ந்து அவர் பதிவிட்டுள்ள Porn vs Prostitution ட்வீட் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பந்தாடப்பட்டு வருகிறது.

டோட்டல் டேமேஜ்

டோட்டல் டேமேஜ்

யோகா வீடியோக்களை பதிவிட்டு, பெண்களை மதிக்க வேண்டும் என பாடம் நடத்திய நடிகை ஷில்பா ஷெட்டியின் மொத்த இமேஜையும் அவரது கணவர் டோட்டல் டேமேஜ் செய்து விட்டார் என பாலிவுட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பழைய ட்வீட்கள்

பழைய ட்வீட்கள்

நிர்வாண பெண்ணை பார்த்து நியூட்டன் ஷாக் ஆகிப் போனார், எப்படி புவியீர்ப்பு திசைக்கு எதிரான வேலைகள் நடக்கிறது என்று படு மோசமான ஆபாச ட்வீட்களை ராஜ் குந்த்ரா பதிவிட்டுள்ளதை எல்லாம் எடுத்துப் போட்டு இப்போ அவரை நெட்டிசன்கள் வெளுத்து வருகின்றனர்.

ஆபாச படம் vs விபச்சாரம்

ஆபாச படம் vs விபச்சாரம்

பணம் போட்டு கேமரா மூலமாக ஆபாசமாக படம் எடுப்பதற்கு சட்டப்படி அனுமதி இருக்கிறது. ஆனால், விபச்சாரம் செய்ய சட்டப்படி நாட்டில் அனுமதி இல்லையே என்கிற ரீதியில் "Ok so here go's Porn Vs Prostitution. Why is it legal to pay someone for sex on camera? How is one different to the other??" என அவர் போட்டுள்ள ட்வீட்டை ஷேர் செய்து நெட்டிசன்கள் இதே பொழப்பா தான் மனுஷன் இருந்திருக்கிறான் என நோண்டி நொங்கெடுத்து வருகின்றனர்.

ஆபாச நடிகைகள்

ஆபாச நடிகைகள்

அது மட்டுமின்றி இந்தியாவில் நடிகர்கள் கிரிக்கெட் ஆடுகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் அரசியல் செய்கின்றனர். அரசியல்வாதிகள் ஆபாச படங்களை பார்க்கின்றனர். மேலும், ஆபாச நடிகைகள் சினிமா நடிகைகளாக மாறிவிடுகின்றனர் என சன்னி லியோனை சாடும் ரீதியிலும் அவர் பதிவிட்ட பழைய ட்வீட்களையும் ஷேர் செய்து பங்கம் செய்து வருகின்றனர்.

4 பிரிவுகளில் வழக்கு

4 பிரிவுகளில் வழக்கு

கடந்த பிப்ரவரி மாதம் ராஜ் குந்த்ரா மீது இது தொடர்பாக புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த புகாரை தீவிரமாக விசாரித்து ஆதாரங்களை திரட்டிய பின்னரே நேற்று அவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 420 (மோசடி), 34 (உள்நோக்கம்), 292 மற்றும் 293 (ஆபாசம் மற்றும் அருவருக்கத்த விளம்பரங்கள் மற்றும் படங்களை தயாரிப்பது) உள்ளிட்ட பிரிவுகளில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X